/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தில் தனியார் தர்பார்
/
ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தில் தனியார் தர்பார்
ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தில் தனியார் தர்பார்
ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தில் தனியார் தர்பார்
ADDED : செப் 23, 2025 05:03 AM

மைசூரு அரண்மனையில் பாரம்பரிய நவராத்திரி சடங்குகள் துவங்கின.
அரண்மனையில் நேற்று காலை மன்னர் குடும்பத்தின் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், பூஜைகளை துவங்கினார். வாணிவிலாஸ் தேவரா வளாகத்தில் யதுவீருக்கு, அவரது மனைவி திரிஷிகா குமாரி, பாத பூஜை, ஆரத்தி நடத்தினார். அவரது மகன் ஆத்யவீர் நரசிம்மராஜ உடையாரும் பூஜை செய்தார்.
அரண்மனை வளாகத்தில் உள்ள கோடி சோமேஸ்வரர் கோவில் அருகில் இருந்து மங்கள வாத்தியங்களுடன் யானை, பசு, குதிரை, ஒட்டகங்கள் வந்தன.
பகல் 12:42 முதல் 12:58 மணிக்குள் ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து, தனி தர்பார் நடத்தினார். இது அவருக்கு 11வது முறை.
அதை தொடர்ந்து, சாமுண்டி மலை சாமுண்டஸ்வரி தேவி, நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரா, ஸ்ரீரங்கபட்டணா ரங்கநாதர், ஜ்வாலாமுகி திரிபுரசுந்தரி, உத்தனஹள்ளி கோடி சோமேஸ்வரி உட்பட 23 கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், தனியார் தர்பார் அரங்கம் முழுதும் தெளிக்கப்பட்டது.
- நமது நிருபர் -