தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தனியார் மருத்துவமனைக்கு திடீர் பூட்டு நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் போராட்டம்

தனியார் மருத்துவமனைக்கு திடீர் பூட்டு நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் போராட்டம்

தனியார் மருத்துவமனைக்கு திடீர் பூட்டு நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் போராட்டம்


ADDED : ஜூன் 29, 2025 03:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2025 03:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு : மூன்று மாதங்களாக, ஊழியர்களுக்கு ஊதியம் தராத தனியார் மருத்துவமனை நிர்வாகம், திடீரென மருத்துவமனைக்கு பூட்டுப் போட்டுள்ளது. கொதிப்படைந்த ஊழியர்கள், மருத்துவமனை முன் தர்ணா நடத்துகின்றனர்.

பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில், 'செவன் ஹில்ஸ்' மருத்துவமனை உள்ளது. இது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகும்.

இங்கு ஐ.சி.யூ., சிடி ஸ்கேன் உட்பட, அதி நவீன மருத்துவ வசதிகள் இருந்தன. நோயாளிகளும் அதிக எண்ணிக்கையில் வந்தனர்.

ஆனால் மூன்று மாதங்களாக, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதியம் கேட்டால், இன்று, நாளை என, நிர்வாகம் இழுத்தடித்தது. இதனால் 50க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், நிர்வாக பிரிவு ஊழியர்களின் குடும்பம், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனைக்கு, திடீரென நேற்று பூட்டுப் போடப்பட்டுள்ளது. இதை கண்டித்து ஊழியர்கள் மருத்துவனை முன், அம்பேத்கர் படத்துடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். 'மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. நாங்கள் எப்படி வாழ்க்கை நடத்துவது? இப்போது மருத்துவமனையை மூடியுள்ளனர்' என, அவர்கள் சாடினர்.

'செவன் ஹில்ஸ்' மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி, தொட்டபல்லாபூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் விசாரணையை துவக்கியுள்ளனர்.

மருத்துவமனையை மூடியதால், சுற்றுப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். நோயாளிகளுக்கு சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us