/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.எஸ்.எஸ்.,சை கட்டுப்படுத்தும் பிரியங்க் கார்கேவின் முயற்சிக்கு பின்னடைவு
/
ஆர்.எஸ்.எஸ்.,சை கட்டுப்படுத்தும் பிரியங்க் கார்கேவின் முயற்சிக்கு பின்னடைவு
ஆர்.எஸ்.எஸ்.,சை கட்டுப்படுத்தும் பிரியங்க் கார்கேவின் முயற்சிக்கு பின்னடைவு
ஆர்.எஸ்.எஸ்.,சை கட்டுப்படுத்தும் பிரியங்க் கார்கேவின் முயற்சிக்கு பின்னடைவு
ADDED : அக் 25, 2025 05:19 AM

பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்.,க்கு க ட்டுப்பாடு விதிப்பது தொடர்பான சட்டத்தை கொண்டு வரும், கிராம மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவின் முயற்சிக்கு, மாநில அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் பிரியங்க் கார்கே, சில வாரங்களுக்கு முன்பு, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.,சின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டுமென, வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதன்படி அரசும், பொது இடங்களில் சங்கங்கள், அமைப்புகள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முன்பு, அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என, அமைச்சரவையில் தீர்மானம் கொண்டு வந்தது. இதுகுறித்து, அதிகாரப்பூர்வமாக உத்தரவும் பிறப்பித்தது.
உத்தரவு பிறப்பித்ததுடன், சட்டமாக வகுக்க வேண்டும் என, அமைச்சர் பிரியங்க் கார்கே விரும்பினார். இதுகுறித்து, புதிதாக மசோதா வகுக்க, மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். இவரது ஆலோசனைக்கு, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட, மூத்த அமைச்சர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரியங்க் கார்கேவுக்கு அவர்கள் கூறிய அறிவுரை:
பொது இடங்களில், சங்கங்கள், அமைப்புகள் நிகழ்ச்சி நடத்த, முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என, அரசு பிறப்பித்த உத்தரவே போதுமானது. சட்டம் கொண்டு வந்தால், ஆர்.எஸ்.எஸ்.,க்கு மட்டுமின்றி, அனைத்து சங்கங்கள், அமைப்புகளுக்கு பொருந்தும்.
தேவையின்றி பிரச்னையை இழுத்துவிட்டுக் கொள்ள வேண்டாம். நாம் நடவடிக்கை எடுத்தால், ஆர்.எஸ்.எஸ்.,க்கு அதிகமான பிரசாரம் கிடைக்கும். மசோதா தாக்கல் செய்ய வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

