தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'வந்தே மாதரம்' பாடலை முழுதுமாக பாட அசோக், விஜயேந்திராவுக்கு பிரியங்க் சவால்

 'வந்தே மாதரம்' பாடலை முழுதுமாக பாட அசோக், விஜயேந்திராவுக்கு பிரியங்க் சவால்

 'வந்தே மாதரம்' பாடலை முழுதுமாக பாட அசோக், விஜயேந்திராவுக்கு பிரியங்க் சவால்


ADDED : செப் 17, 2026 03:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 03:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலபுரகி: ''டெலிபிராம்ப்டர் உதவியின்றி, 'வந்தே மாதரம்' பாடலை முழுதுமாக எதிர்க்கட்சி தலைவர் அசோக், பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திராவால் பாட முடியுமா,'' என, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

தலவாரா சமூகத்திற்கு எஸ்.டி., சான்றிதழ் வழங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. கர்நாடகாவில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பின் பருவமழை காலம் முடிவடைகிறது. இதையடுத்து, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினரின் கூச்சலால் நேரம் வீணடிக்கப்பட்டது. இம்முறை, கே.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு உட்பட எந்த பிரச்னையையும், விவாதிக்க காங்கிரஸ் அரசு தயாராக இருக்கிறது.

கே.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடில் என்னை மட்டுமே எதிர்க்கட்சியினர் குறிவைக்கின்றனர். கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா குறித்து, எதற்காக மவுனம் சாதிக்கின்றனர் என தெரியவில்லை.

வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே அனைவருக்கும் தெரியும். இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சி தலைவர் அசோக், பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திராவுக்கு தனிப்பட்ட முறையில் சவால் விடுகிறேன்... டெலிபிராம்ப்டரின் உதவியின்றி வந்தே மாதரம் முழு பாடலையும் உங்களால் பாட முடியுமா... இது எனது சவால்.

இதற்காக, நீங்கள் வீட்டிலேயே பயிற்சி செய்து வந்தாலும் பரவாயில்லை. முடிந்தால் முழு பாடலையும் பாடுங்கள். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கூட எதையும் பார்க்காமல், வந்தே மாதரத்தை முழுமையாக பாட முடியாது.

டில்லி கலவர வழக்கில் சிறையில் உள்ள உமர் காலித்தை, தேச விரோதி என்று நீதிமன்றம் அறிவிக்கவில்லை. அவரது வழக்கில் ஏன் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை... கே.பி.எஸ்.சி., ஊழல் குறித்து ஏ.பி.வி.பி., பேச வேண்டும். ஏ.பி.வி.பி.,யின் செயல்பாடுகள் பொறுத்து கொள்ளப்படாது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us