தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எடியூர் ஏரியில் சிலை கரைக்க தற்காலிக தடை

 எடியூர் ஏரியில் சிலை கரைக்க தற்காலிக தடை

 எடியூர் ஏரியில் சிலை கரைக்க தற்காலிக தடை


ADDED : செப் 17, 2026 03:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 03:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: எடியூர் ஏரியில் விநாயகர் சிலை கரைக்க, நாளை முதல் 22ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு எடியூர் ஏரியில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு, கடந்த 14ம் தேதி முதல், 26ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

சில நாட்களாக எடியூர் ஏரியில் சிலைகளை கரைக்கும் பணிகள் மும்முரமாக நடந்தன.

தற்போது, ஏரியில் சிலைகள் கரைப்பதற்காக அமைக்கப்பட்ட குளத்தில் பெரும்பாலும் நிரம்பிவிட்டது.

இதனால், வரும் நாட்களில் சிலைகளை கரைப்பதற்கு இடமில்லை. மேலும், நீரின் அடிப்பகுதியில் மண், கழிவுகள் அதிகம் உள்ளன.

கழிவுகளை அகற்றி, புதிதாக நீரை நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால், நாளை முதல் வரும் 22ம் தேதி வரை, சிலைகள் கரைப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் தெரிவித்து உள்ளது.

இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us