/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
250 மீட்டர் கோபுரம் கட்டும் திட்டம் பி.டி.ஏ.,விடம் ஒப்படைப்பு
/
250 மீட்டர் கோபுரம் கட்டும் திட்டம் பி.டி.ஏ.,விடம் ஒப்படைப்பு
250 மீட்டர் கோபுரம் கட்டும் திட்டம் பி.டி.ஏ.,விடம் ஒப்படைப்பு
250 மீட்டர் கோபுரம் கட்டும் திட்டம் பி.டி.ஏ.,விடம் ஒப்படைப்பு
ADDED : ஜூலை 26, 2025 05:04 AM
பெங்களூரு: பெங்களூரில் சுற்றுலாப்பயணியரை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட 250 மீட்டர் உயரமுள்ள கோபுரம் கட்டும் திட்டம், பி.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பெங்களூருக்கு வரும் சுற்றுலாப் பயணியரை அதிகரிப்பதற்காக, 250 மீட்டர் உயரமுள்ள கோபுரம் கட்டுவதற்கு கடந்தாண்டில் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு 'ஸ்கை டெக்' என பெயரிடப்பட்டது. இதற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
தெற்கு ஆசியாவில் மிக உயரமாக அமைக்கப்படும் இந்த கோபுரத்தில் இருந்து முழு நகரத்தையும், 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும் என கூறப்பட்டது.
இந்த கோபுரத்தை கட்டுவதற்காக பெங்களூரு ஸ்மார்ட் இன்பிராஸ்டி ரக்சர் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. கெம்பே கவுடா லே - அவுட் பகுதியில், கோபுரம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உயரமான கோபுரம் கட்டினால், விமான விபத்துகள் அபாயம் என்ற அச்சத்தில், அந்த இடம் கைவிடப்பட்டது. இதையடுத்தது, திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது, 'ஸ்கை டெக்' திட்டத்தை பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. கோபுரத்தை கட்ட புதிய இடமாக நைஸ் சாலையில் உள்ள கொம்மகட்டாவிற்கு அருகில் உள்ள ராமசந்திரா கிராமத்தில் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, 41 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.