/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாக்குறுதி திட்டங்கள் கிடைக்காது? பசவராஜ் ராயரெட்டி சர்ச்சை கருத்து!
/
வாக்குறுதி திட்டங்கள் கிடைக்காது? பசவராஜ் ராயரெட்டி சர்ச்சை கருத்து!
வாக்குறுதி திட்டங்கள் கிடைக்காது? பசவராஜ் ராயரெட்டி சர்ச்சை கருத்து!
வாக்குறுதி திட்டங்கள் கிடைக்காது? பசவராஜ் ராயரெட்டி சர்ச்சை கருத்து!
ADDED : ஜூலை 07, 2025 04:01 AM

பெங்களூரு, : ''மக்களுக்கு சாலைகள் வேண்டும் என்றால், வாக்குறுதி திட்டங்கள் வேண்டாம் என, எழுதி தாருங்கள்,'' என, முதல்வரின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி தெரிவித்தார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் 135 தொகுதிகளை கைப்பற்றி, பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர, ஐந்து வாக்குறுதிகள் காரணமாக இருந்தன. இத்திட்டங்களால் மாநில வளர்ச்சி திட்டங்களில், பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களே பொருமுகின்றனர். தங்கள் தொகுதிக்கு நிதி வழங்கவில்லை. இதற்கு வாக்குறுதி திட்டங்களே காரணம் என, பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகின்றனர்.
திட்டங்களை மறு பரிசீலனை செய்யும்படி வலியுறுத்துகின்றனர். முதல்வரின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி, பல முறை இதே கருத்தை தெரிவித்து, கட்சிக்கும், முதல்வர் சித்தராமையாவுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார்.
கொப்பாலில் அவர் அளித்த பேட்டி:
கிராமங்களுக்கு சாலைகள் வேண்டுமா. அப்படி என்றால் வாக்குறுதி திட்டங்கள் வேண்டாம் என, எழுதி தாருங்கள். அந்த பணத்தில் சாலைகள் அமைப்போம். உங்களுக்கு சாலைகள் வேண்டும் என்றால் அரிசி உட்பட, அனைத்தும் நிறுத்தப்படும். உங்களின் கருத்துகள் அடிப்படையில், முதல்வருக்கு ஆலோசனை கூறுவேன்.
எங்களிடம் இருப்புள்ள நிதியில், கிராமங்களுக்கு சாலை அமைப்பது கஷ்டம். நிதி இருப்பை கவனித்து, சாலைகளை அமைக்க முடியுமா என்பதை பார்க்க வேண்டும். வாக்குறுதி திட்டங்களுக்கு 54,000 கோடி ரூபாய் செலவிடுகிறோம். வரும் நாட்களில் சாலைகளை சரி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பசவராஜ் ராயரெட்டியின் கருத்துகள், எதிர்க்கட்சியினருக்கு அவல் கொடுத்துள்ளது. இதை பற்றி விமர்சிக்க துவங்கியுள்ளனர்.