/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இளம்பெண்ணை கர்ப்பமாக்கியது நிரூபணம்: பா.ஜ., பிரமுகரின் குடும்பத்துக்கு சிக்கல்
/
இளம்பெண்ணை கர்ப்பமாக்கியது நிரூபணம்: பா.ஜ., பிரமுகரின் குடும்பத்துக்கு சிக்கல்
இளம்பெண்ணை கர்ப்பமாக்கியது நிரூபணம்: பா.ஜ., பிரமுகரின் குடும்பத்துக்கு சிக்கல்
இளம்பெண்ணை கர்ப்பமாக்கியது நிரூபணம்: பா.ஜ., பிரமுகரின் குடும்பத்துக்கு சிக்கல்
ADDED : செப் 28, 2025 06:37 AM

மங்களூரு: புத்துாரின் பா.ஜ., பிரமுகரின் மகன் கிருஷ்ணாஜி ராவ், திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, பெண்ணை கர்ப்பமாக்கியது உறுதியாகியுள்ளது. பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு, கிருஷ்ணாஜி ராவே தந்தை என்பது, டி.என்.ஏ., பரிசோதனை நிருபித்துள்ளது.
தட்சிணகன்னடா மாவட்டம், புத்துாரில் வசிப்பவர் ஜெகன்னிவாஸ் ராவ். இவரது மகன் கிருஷ்ணாஜிராவ், 21. பா.ஜ., பிரமுகர். இவர் தன்னுடன் சிறு வயதில் படித்த மாணவியை காதலிப்பதாக கூறி வந்தார். 2024 அக்டோபர் 11ம் தேதி, தன் வீட்டில் யாரும் இல்லாதபோது, அவரை கிருஷ்ணாஜி ராவ், தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அவரை பலாத்காரம் செய்தார். நடப்பாண்டு ஜனவரியிலும் இது போன்று, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார். இதில் அவர் கருவுற்றார். இதுகுறித்து நடந்த விஷயத்தை தன் பெற்றோரிடம் கூறினார். அவர்களும் கிருஷ்ணாஜி ராவ் குடும்பத்தினரிடம் தெரிவித்து, உடனடியாக திருமணத்தை நடத்தும்படி கோரினர்; அவர்களும் திருமணத்துக்கு சம்மதித்தனர்.
கைது ஆனால் கிருஷ்ணாஜி ராவ், சம்மதிக்கவில்லை. 'இளம்பெண் கர்ப்பத்துக்கு, தான் காரணம் இல்லை. எனவே அவரை திருமணம் செய்ய முடியாது' என, பிடிவாதம் பிடித்தார். இதனால், இளம்பெண், புத்துார் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர். தன் மீது வழக்குப் பதிவானதும், கிருஷ்ணாஜி ராவ் தலைமறைவானார். அவரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். அதன்பின் ஜாமினில் விடுதலையானார்.
இதற்கிடையே இளம்பெண்ணுக்கு, குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என, கிருஷ்ணாஜி கூறியதால், டி.என்.ஏ., பரிசோதனை செய்யும்படி, அவரது குடும்பத்தினர் வலியுறுத்தினர்.
இதன்படி புத்துார் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், கிருஷ்ணாஜி ராவ், இளம்பெண் மற்றும் குழந்தையின் ரத்தத்தை போலீசார் சேகரித்தனர். இதை டி.என்.ஏ., பரிசோதனைக்காக, பெங்களூரின் ஆய்வகத்துக்கு அனுப்பினர்.
வலியுறுத்தல் ஆய்வகத்தில் இருந்து, நேற்று அறிக்கை வந்தது. இளம்பெண் கர்ப்பமடைய, கிருஷ்ணாஜி ராவே காரணம். இவரே குழந்தையின் தந்தை என்பது, அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே தங்கள் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, கிருஷ்ணாஜி ராவிடம் வலியுறுத்துகின்றனர்.
இளம்பெண்ணுக்கு ஆதரவாக உள்ள விஸ்வ கர்மா மஹாசபா தலைவர் நஞ்சுண்டி நேற்று அளித்த பேட்டி:
டி.என்.ஏ., பரிசோதனையில், 'பாசிடிவ்' என, வந்துள்ளது. கிருஷ்ணாஜி ராவே குழந்தை என்பது உறுதியானதால், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
ஹிந்து அமைப்புகளே முன் நின்று, திருமணத்தை நடத்த வேண்டும். இதன் மூலம் இரண்டு குடும்பங்களையும், ஒன்று சேர்க்க வேண்டும். சட்ட போராட்டத்தில் எங்களுக்கு விருப்பம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.