தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஈஸ்வரப்பா மீதான சொத்து வழக்கு: லோக் ஆயுக்தாவுக்கு நோட்டீஸ்

ஈஸ்வரப்பா மீதான சொத்து வழக்கு: லோக் ஆயுக்தாவுக்கு நோட்டீஸ்

ஈஸ்வரப்பா மீதான சொத்து வழக்கு: லோக் ஆயுக்தாவுக்கு நோட்டீஸ்


UPDATED : நவ 17, 2026 12:00 AM

ADDED : நவ 16, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 12:00 AM ADDED : நவ 16, 2026 08:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: தனக்கு எதிரான சட்டவிரோத சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி, முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா தாக்கல் செய்த மனு தொடர்பாக, கர்நாடக லோக் ஆயுக்தாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பா.ஜ., ஆட்சியில் துணை முதல்வராக இருந்தவர் ஈஸ்வரப்பா. தற்போது, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஈஸ்வரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர், சட்டவிரோதமாக சொத்து குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. லோக் ஆயுக்தாவில் வக்கீல் வினோத் என்பவர், 2016ல் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், ஈஸ்வரப்பா மீது லோக் ஆயுக்தாவில் வழக்கு பதிவானது.

இந்த வழக்கு, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நீதிமன்றமும் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி, லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டது. தன் மீது பதிவான வழக்கை, ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஈஸ்வரப்பா மனு தாக்கல் செய்தார். இவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது குறித்து கேள்வி எழுப்பி, உச்ச நீதிமன்றத்தில் ஈஸ்வரப்பா மனு தாக்கல் செய்தார். இம்மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான இரண்டு நீதிபதிகள் அமர்வு நேற்று விசாரித்தது.

மனுதாரரின் வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக முழுமையான தகவலை தெரிவிக்கும்படி, கர்நாடக லோக் ஆயுக்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us