/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் சொத்து வரி செலுத்தாதவர்கள் மாநகராட்சிக்கு ரூ.390 கோடி இழப்பு
/
பெங்களூரில் சொத்து வரி செலுத்தாதவர்கள் மாநகராட்சிக்கு ரூ.390 கோடி இழப்பு
பெங்களூரில் சொத்து வரி செலுத்தாதவர்கள் மாநகராட்சிக்கு ரூ.390 கோடி இழப்பு
பெங்களூரில் சொத்து வரி செலுத்தாதவர்கள் மாநகராட்சிக்கு ரூ.390 கோடி இழப்பு
ADDED : மார் 24, 2025 05:01 AM

பெங்களூரு: சொத்து வரி செலுத்தாதவர்களால், பெங்களூரு மாநகராட்சிக்கு 390 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
சொத்து வரியை வசூலிப்பதில் பெங்களூரு மாநகராட்சி தீவிரம் காண்பித்து வருகிறது.
இருப்பினும், சொத்துவரியை செலுத்தாமல் சிலர் காலம் தாழ்த்தி வருகின்றனர். இவர்களிடம் சொத்து வரியை வசூல் செய்வதற்கு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த வாரம், மாநகராட்சி அறிவிப்பில், இம்மாதம் 31ம் தேதி வரை சொத்து வரியை அபராதம் இன்றி செலுத்தலாம்; அதற்கு மேல் சொத்து வரியை செலுத்துவோருக்கு 100 சதவீதம் அபராதமும், 9 முதல் 15 சதவீதம் வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்புக்கு பின், பலரும் சொத்து வரியை செலுத்தினர். அப்படி இருந்தும் பலர் சொத்து வரியை செலுத்தவில்லை. இத்தகையோர் பட்டியலை, பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் சொத்து வரி செலுத்துவோர் எண்ணிக்கை 20.5 லட்சம். இதில், 3.49 லட்சம் பேர் இன்னும் சொத்து வரியை செலுத்தாமல் இருக்கின்றனர்.
இதில், நீண்ட காலமாக சொத்து வரியை செலுத்தாதவர்கள் 1.73 லட்சம், நடப்பு ஆண்டு வரியை செலுத்தாதவர்கள் 1.76 லட்சம் பேர் உள்ளனர். இவர்களால் மாநகராட்சிக்கு 390 கோடி நிதி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
நீண்ட காலம் வரி செலுத்தாதவர்களுக்கு பல முறை நோட்டீஸ், தனிப்பட்ட அழைப்புகள், மெசேஜ்கள் அனுப்பிய போதும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. இவர்களால் மற்றவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.