/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சொத்து வரி தள்ளுபடி மே 31 வரை நீட்டிப்பு
/
சொத்து வரி தள்ளுபடி மே 31 வரை நீட்டிப்பு
ADDED : மே 01, 2025 05:39 AM
பெங்களூரு: சொத்து உரிமையாளர்கள், முழுமையாக வரி செலுத்தி, 5 சதவீதம் தள்ளுபடி பெறும் சலுகையை, மே 31 வரை பெங்களூரு மாநகராட்சி நீட்டித்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
சொத்துதாரர்கள் 2025 - 26ம் ஆண்டுக்கான சொத்து வரியை, ஏப்ரல் 30க்குள் செலுத்தினால், வரி தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி சலுகை அளிக்கப்படுகிறது. சலுகையை பயன்படுத்தி லட்சக்கணக்கான சொத்துதாரர்கள் வரி செலுத்தி, பயன் பெற்றனர்.
மேலும் லட்சக்கணக்கான மக்கள், வரி செலுத்த வேண்டியுள்ளது. எனவே தள்ளுபடி சலுகையை நீட்டிக்கும்படி சொத்துதாரர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதன்படி மே 31ம் தேதி வரை, வரி தள்ளுபடி சலுகையை நீட்டிக்க, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்தது.
பெங்களூரு மாநகராட்சி சட்டம் - 2020ன் படி, எந்த நிதியாண்டுகளிலும் தள்ளுபடி சலுகையை நீட்டிக்க அனுமதி உள்ளது. இதன்படி வரி தள்ளுபடி சலுகையை, மே 31 வரை நீட்டிக்க மாநில அரசிடம் மாநகராட்சி அனுமதி கோரியது. அரசும் ஒப்புதல் அளித்ததால், சலுகையை நீட்டித்து மாநகராட்சி உத்தரவிட்டது. மே 31 க்குள் வரி செலுத்தி சலுகையை பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.