தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரை குறைகூறி வீடியோ 'இன்ஸ்டா' பிரபலத்துக்கு எதிர்ப்பு

பெங்களூரை குறைகூறி வீடியோ 'இன்ஸ்டா' பிரபலத்துக்கு எதிர்ப்பு

பெங்களூரை குறைகூறி வீடியோ 'இன்ஸ்டா' பிரபலத்துக்கு எதிர்ப்பு


ADDED : ஜூன் 23, 2025 08:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2025 08:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு : பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, பொழுதுபோக்குக்காக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுபவர் அஸ்வின் - அனுபமா தம்பதி. இவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை, 50,000க்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.

வீடியோக்களை லட்சக்கணக்கானோர் பார்வையிடுகின்றனர். இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர்கள், கடந்த 19ம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டனர்.

அதில், 'பெங்களூரில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. இந்த காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 15 சிகரெட்டுகள் பிடித்ததற்கு சமம். இதனால், நாங்கள் பெங்களூரிலிருந்து வேறு ஊருக்கு செல்கிறோம். வேலை, பணம் முக்கியம் தான். அதைவிட உடல்நலன் முக்கியம். இந்த நகரம் எங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்கிறது' என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வீடியோ, இன்ஸ்டாகிராம் உட்பட பல சமூக வலைதளங்களில் வைரலாகியது. பெங்களூரை குறை கூறியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதில், பரவலாக கூறப்பட்ட விஷயம் என்னவென்றால், பிற மாநிலத்தை சேர்ந்தவர்களாலேயே பெங்களூரு நாசமாகிறது. தங்களுக்கு தேவையானது கிடைத்ததும், பெங்களூரை பற்றி குறை கூறி விட்டு செல்கின்றனர்.

'இது போன்றவர்கள், தாராளமாக செல்லலாம். செல்லும் போது, பெங்களூரில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களையும் கூட்டிச்செல்லுங்கள். அப்போது தான் பெங்களூரு மீண்டும் பழைய நிலைக்கு வரும்' என கூறப்பட்டு வருகிறது. அதே சமயம், பெங்களூரில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது குறித்து சிலர் கவலை தெரிவித்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us