/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
10 மெட்ரோ நிலையங்களில் அமுல் தயாரிப்பு விற்க எதிர்ப்பு
/
10 மெட்ரோ நிலையங்களில் அமுல் தயாரிப்பு விற்க எதிர்ப்பு
10 மெட்ரோ நிலையங்களில் அமுல் தயாரிப்பு விற்க எதிர்ப்பு
10 மெட்ரோ நிலையங்களில் அமுல் தயாரிப்பு விற்க எதிர்ப்பு
ADDED : ஜூன் 17, 2025 11:05 PM
பெங்களூரு: பெங்களூரில் உள்ள பட்டந்துார் அக்ரஹாரா, இந்திராநகர், பென்னிகானஹள்ளி, பையப்பனஹள்ளி, டிரினிட்டி, எஸ்.எம்.வி.டி., கெம்பேகவுடா, நேஷனல் கல்லுாரி, ஜெயநகர், பனசங்கரி ஆகிய 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் அமுல் பால் தயாரிப்புகளை விற்பனை செய்ய பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கு எதிர்க்கட்சியான ம.ஜ.த.,வும், கன்னட அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து, நேற்று ம.ஜ.த., வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவகுமார், தன் சுயமரியாதையை கமிஷனுக்காக விற்றுவிட்டார். மீண்டும் தன் சித்து விளையாட்டுகளை துவக்கிவிட்டார்.
தேர்தலுக்கு முன்பு நந்தினி பால் தயாரிப்புகள் விற்பனை என்பது வெறும் பணம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை; அது கன்னடர்களின் மரியாதை, சுய மரியாதை பற்றியது என, சிவகுமார் கூறியிருந்தார்.
தற்போது கமிஷனுக்காக, பிற மாநில தயாரிப்பான அமுல் பால் தயாரிப்புகளை, பத்து மெட்ரோ நிலையங்களில் விற்பதற்கு அனுமதி அளித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், நந்தினி தயாரிப்புகளுக்கான மரியாதை குறைந்து விட்டது; இதற்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை.
காங்கிரஸ் அரசு, நந்தினி தயாரிப்புகளை, மார்க்கெட்டில் உள்ள பிற நிறுவனங்களுடன் கொண்டு சென்று விற்பதில் தோற்றுவிட்டது. இது கன்னடர்களின் பெருமைக்குரிய விஷயங்களில் ஒன்றான நந்தினிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.