தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைதை கண்டித்து போராட்டம்

 இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைதை கண்டித்து போராட்டம்

 இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைதை கண்டித்து போராட்டம்


ADDED : பிப் 27, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 05:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைதை கண்டித்து, இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் பெங்களூரில் நேற்று போராட்டம் நடத்தினர்.

டில்லியில் கடந்த, 16 முதல், 20ம் தேதி வரை, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாநாடு நடந்தது. மாநாட்டு வளாகத்திற்குள் புகுந்து அரை நிர்வாண போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் உதய் பானு சிப்பும் கைது செய்யப்பட்டார்.

அவரது கைதை கண்டித்து, பெங்களூரு சுதந்திர பூங்காவில், காங்கிரஸ் உள்அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர் சட்டையை கழற்றி, அரை நிர்வாணமாக நின்றனர். 'போராட்டம் நடத்துவது உரிமை அது குற்றமல்ல' என்றும் கோஷம் எழுப்பினர்.

மத்திய அரசை கண்டித்து சுதந்திர பூங்காவில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், சாலையில் இரும்பு தடுப்பு கம்பிகளை வைத்தனர். ஆனாலும், இரும்பு தடுப்பு மீது போராட்டக்காரர்கள் ஏறினர். உடன் அவர்கள் கைது செய்யப்பட்டு, வேன், பஸ்களில் அழைத்து செல்லப்பட்டனர். சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us