தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மெட்ரோ ரயில் நிலையத்தில் போராட்டம் பா.ஜ., - எம்.பி., உட்பட 9 பேருக்கு நோட்டீஸ்

 மெட்ரோ ரயில் நிலையத்தில் போராட்டம் பா.ஜ., - எம்.பி., உட்பட 9 பேருக்கு நோட்டீஸ்

 மெட்ரோ ரயில் நிலையத்தில் போராட்டம் பா.ஜ., - எம்.பி., உட்பட 9 பேருக்கு நோட்டீஸ்


ADDED : பிப் 20, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: அனுமதி பெறாமல், மெட்ரோ ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா உட்பட ஒன்பது பேருக்கு விளக்கம் கேட்டு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பெங்களூரு மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம், கடந்தாண்டு பிப்ரவரியில், 71 சதவீதம் உயர்த்தப்பட்டது. பல்வேறு தரப்பினரின் போராட்டத்தை அடுத்து குறைக்கப்பட்டது.

நாட்டிலேயே மெட்ரோ ரயில் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படும் நகரமாக பெங்களூரு விளங்குகிறது.

இந்நிலையில், இந்தாண்டு மீண்டும், மெட்ரோ ரயில் கட்டணம் ஐந்து சதவீதம் உயர்த்தப்படும் என, நம்ம மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.

இதற்கு, மெட்ரோ பயணியர் மற்றும் பா.ஜ., - ம.ஜ.த., உள்ளிட்ட சில அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த உயர்வு தொடர்பாக, பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, மத்திய அமைச்சர் கட்டாரை சந்தித்து, கட்டண உயர்வுக்கு தடை விதிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து கட்டண உயர்வு நிறுத்தப்பட்டது.

மாநில அரசு தான் மெட்ரோ கட்டணத்தை உயர்த்தியதாக கூறி, கடந்த, 9ம் தேதி எம்.பி., தேஜஸ்வி சூர்யா, பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமமூர்த்தி உட்பட பலர், ஜெயநகர் ஆர்.வி., மெட்ரோ ரயில் நிலையம் அருகே போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி., - எம்.எல்.ஏ., உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது, ஜெயநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபக், மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் தனி வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை, நேற்று முன்தினம் மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்றம், 'எம்.பி., தேஜ்வி சூர்யா உட்பட ஒன்பது பேருக்கு நோட்டீஸ் அனுப்பி, மார்ச், 6ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us