/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சட்டவிரோத குடியிருப்பு இடிப்பு அமைச்சர் வீட்டு முன் போராட்டம்
/
சட்டவிரோத குடியிருப்பு இடிப்பு அமைச்சர் வீட்டு முன் போராட்டம்
சட்டவிரோத குடியிருப்பு இடிப்பு அமைச்சர் வீட்டு முன் போராட்டம்
சட்டவிரோத குடியிருப்பு இடிப்பு அமைச்சர் வீட்டு முன் போராட்டம்
ADDED : டிச 22, 2025 06:37 AM

சஹகாரா நகர்: பெங்களூரு கோகிலு லே - அவுட் பகுதியில் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்துக்கு சொந்தமான பகுதியில் சட்டவிரோதமாக 200க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டிருந்தன.
இந்த வீடுகள் நேற்று முன்தினம் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டன. இப்பணியில் கிரேட்டர் பெங்களூரு ஆணைய, வடக்கு மாநகராட்சி, பெங்., திடக்கழிவு மேலாண்மை நிறுவன அதிகாரிகள், போலீசார், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.
வீடுகள் இழந்த 100க்கும் மேற்பட்டோர், நேற்று பெங்களூரு சஹகாரா நகரில் உள்ள வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடுப்புகள் அமைத்து, அமைச்சர் வீட்டின் உள்ளே யாரும் வராதவாறு தடுத்தனர்.
இதனால், அவர்கள் சாலையில் அமர்ந்து போராடினர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.