தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'போராட்டத்தில் ஈடுபடுவோர்  சட்டத்தை பின்பற்ற உத்தரவு'

 'போராட்டத்தில் ஈடுபடுவோர்  சட்டத்தை பின்பற்ற உத்தரவு'

 'போராட்டத்தில் ஈடுபடுவோர்  சட்டத்தை பின்பற்ற உத்தரவு'


ADDED : ஜூலை 25, 2026 12:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 12:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''போராட்டத்தில் பங்கேற்போர் சட்டவிதிகளை கடைபிடிக்க வேண்டும்,'' என, டி.ஜி.பி., சலீம் கூறி உள்ளார்.

'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி கரப்பான் பூச்சி என்ற கட்சியினர், பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து டி.ஜி.பி., சலீம் அளித்த பேட்டி: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, மாநிலத்தில் பல இடங்களில் போராட்டம் நடக்கிறது.

போராட்டம் நடத்த அனுமதி உண்டு. ஆனால், போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்தப்பட வேண்டும். மற்ற இடங்களில் போராட்டம் நடத்தக்கூடாது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தில் ஈடுபடுவோர் அனைவரும் சட்டவிதிகளை கடைபிடிக்க வேண்டும். அமைதியான முறையில் மட்டுமே போராட வேண்டும்.

போராட்டத்தின் போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. போராட்டம் நடக்கும் இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என அனைத்து எஸ்.பி., மற்றும் கமிஷனர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us