ADDED : ஜூன் 12, 2026 10:45 PM

அ நிறம் | அளவு
தங்கவயல்: மாரிகுப்பம் செயின்ட் பால்ஸ் சர்ச் சமுதாய கூடத்தில், 200 மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தங்கவயலின் தமிழார்வலர் இலங்கேஸ்வரனின் பெற்றோர் தேவகி சீராளன் நினைவு நாளையொட்டி ஆண்டு தோறும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 200 பேருக்கு, கல்விக்கு தேவையான நோட்டு புத்தகங்கள், சீருடைகள் வழங்குவது வழக்கம்.
அதன்படி, நேற்று நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. தங்கவயல் சட்டக் கல்லுாரி முதல்வர் மேத்யூஸ், செயின்ட் பால்ஸ் சர்ச் அருட்தந்தை தங்கராஜ், தமிழர் கலை இலக்கிய பாசறை தலைவர் ஏ.ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியை, அகஸ்டின் தொகுத்து வழங்கினார்.
