/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு மருத்துவமனைகளில் சத்தான உணவு வழங்கல்
/
அரசு மருத்துவமனைகளில் சத்தான உணவு வழங்கல்
ADDED : செப் 03, 2025 09:54 AM

பெங்களூரு : அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்கும் திட்டத்தை, பெங்களூரு சி.வி.ராமன்நகர் அரசு மருத்துவமனையில் சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேற்று துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:
நோயாளிகள் உடல் நலம் மீண்டு வர சிகிச்சையுடன், அவர்களுக்கு சத்தான உணவு கிடைப்பதும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்துள்ளோம்.
சி.வி.ராமன்நகர், ஜெயநகர், மல்லேஸ்வரம் கே.சி., பொது மருத்துவமனைகளில் இந்த திட்டத்தை துவக்கி உள்ளோம். நோயாளிகளுக்கு தினசரி சத்தான உணவு விநியோகம் செய்ய, இஸ்கானுடன், சுகாதார துறை ஒப்பந்தம் செய்துள்ளது.
நோயாளிகளின் மருத்துவ தேவையின் அடிப்படையில், உணவு பிரிக்கப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மாவட்ட மருத்துவமனைகளிலும் சத்தான உணவு விநியோகம் செய்யப்படும்.
தற்போது தினமும் 250 நோயாளிகளுக்கு உணவு வழங்க இஸ்கானுடன், கையெழுத்து ஒப்பந்தமாகி உள்ளது. இதற்காக ஒன்பது மாதங்களுக்கு 1.37 கோடி ரூபாய் செலவை சுகாதார துறை ஏற்கும். மூன்று நேரமும் உணவு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.