/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பி.டி.ஏ., வீடு, மனைகள் வாங்க முன்பணம் பாதியாக குறைப்பு
/
பி.டி.ஏ., வீடு, மனைகள் வாங்க முன்பணம் பாதியாக குறைப்பு
பி.டி.ஏ., வீடு, மனைகள் வாங்க முன்பணம் பாதியாக குறைப்பு
பி.டி.ஏ., வீடு, மனைகள் வாங்க முன்பணம் பாதியாக குறைப்பு
ADDED : ஜூன் 20, 2025 11:26 PM
பெங்களூரு: பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் மனைகள், வீடுகள் வாங்குவதற்காக முன்பணமாக செலுத்த வேண்டிய தொகை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
நகரில் உள்ள பல பகுதிகளில் மனைகள், வீடுகளை பி.டி.ஏ., விற்பனை செய்து வருகிறது.
மனைகள், வீடுகளை வாங்க முன்பணம் செலுத்துவது கட்டாயம். இந்த முன்பணம் கடந்த மே மாதத்தில் அதிகரிக்கப்பட்டது.
வீடு அல்லது மனை வாங்க அவற்றின் மொத்த மதிப்பில், பொது பிரிவினர் 25 சதவீதமும்; எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினர் 10 சதவீதம் முன்பணமாக செலுத்த வேண்டும். இது வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
முன்பணமாக அதிக ரூபாய் செலுத்த வேண்டி இருந்ததால், வங்கியில் லோன் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக பலரும் தெரிவித்தனர். இதனால், பிளாட்டுகளின் விற்பனையும் குறைந்தது.
இதை கருத்தில் கொண்ட பி.டி.ஏ., நிர்வாகம், முன்பணம் செலுத்தும் தொகையை குறைத்து புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இதன்படி, பொது பிரிவினர் 12.5 சதவீதமும்; எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினர் 5 சதவீதமும் முன்பணம் செலுத்தினால் போதும் என அறிவித்துள்ளது.
இதன் மூலம் முன் பணம் பாதியாக குறைந்துள்ளது. இதை தெளிவுப்படுத்தும் விதமாக, சுப்பராயனப்பா பாளையாவில் உள்ள 'கனிமினிகே' வீட்டுவசதி வளாகத்தில், இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 'வீட்டுவசதி திருவிழா' நடக்கிறது.