தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 4 தபால் நிலையங்களை மூட திட்டம்; தங்கவயலில் பொதுமக்கள் அதிருப்தி

 4 தபால் நிலையங்களை மூட திட்டம்; தங்கவயலில் பொதுமக்கள் அதிருப்தி

 4 தபால் நிலையங்களை மூட திட்டம்; தங்கவயலில் பொதுமக்கள் அதிருப்தி


ADDED : ஜன 03, 2026 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2026 05:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயலில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் நான்கு தபால் நிலைய அலுவலகங்கள் மூடும் அபாயத்தில் உள்ளன.

தங்கவயலில் கோரமண்டல், சாம்பியன், மாரிகுப்பம், பெமல் நகர் ஆகிய நான்கு தபால் நிலையங்களில் வர்த்தக பரிமாற்றம் கணிசமாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், இவைகளை மூடிவிட்டு ராபர்ட்சன்பேட்டை தலைமை தபால் நிலையத்தில் இருந்து கடித போக்குவரத்து, மணியார்டர் ஆகியவைகளை மேற்கொள்ளலாம் என மாநில தலைமை தபால் நிலையத்திற்கு, கோலார் மாவட்ட தபால் நிலையத்தில் இருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

மீதியுள்ள உரிகம், ஆண்டர்சன்பேட்டை நிலையங்கள் இயங்கும் என தெரிகிறது. தங்கவயலில் மட்டுமின்றி, கோலார் மாவட்டத்தில் கோலார் நகரில் உள்ள தபால் அலுவலகத்திற்கும் இதுபோன்ற நிலைமை உள்ளது.

தங்கவயலில் கோரமண்டல், சாம்பியன், மாரிகுப்பம் ஆகிய மூன்று தபால் நிலையங்கள் சுரங்க குடியிருப்பு பகுதியில் உள்ளன. பெரும்பாலானோருக்கு முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு பென்ஷன், கிரஹ லட்சுமி திட்ட தொகையும் தபால் நிலையங்கள் மூலமாக தான் வருகிறது.

தபால் நிலையங்கள் மூடப் பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும். ராபர்ட்சன்பேட்டை தபால் நிலையத்துக்கு பணம் வந்துள்ளதா என, கேட்டு ஆட்டோக்கள் மூலம் அலைய நேரிடும். எனவே தபால் நிலையங்களை மூடும் திட்டத்தை கைவிடுமாறு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us