/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு நடைபாதைகளில் துாய்மை அரசுடன் கைகோர்க்க பொதுமக்களுக்கு அழைப்பு
/
பெங்களூரு நடைபாதைகளில் துாய்மை அரசுடன் கைகோர்க்க பொதுமக்களுக்கு அழைப்பு
பெங்களூரு நடைபாதைகளில் துாய்மை அரசுடன் கைகோர்க்க பொதுமக்களுக்கு அழைப்பு
பெங்களூரு நடைபாதைகளில் துாய்மை அரசுடன் கைகோர்க்க பொதுமக்களுக்கு அழைப்பு
ADDED : செப் 14, 2025 04:21 AM

பெங்களூரு: ''பெங்களூரில் நடைபாதையை சுத்தமாக வைக்க அரசுடன், பொதுமக்கள் கைகோர்க்க வேண்டும்,'' என, மத்திய மாநகராட்சி கமிஷனர் ராஜேந்திர சோழன் அழைப்பு விடுத்துள்ளார்.
பெங்களூரு சென்ட்ரல் மாநகராட்சி கமிஷனர் ராஜேந்திர சோழன், மெஜஸ்டிக் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள நடைபாதைகளை ஆய்வு செய்தார். அப்போது அங்கு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நடைபாதையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து துடைப்பத்தை வைத்து, ராஜேந்திர சோழனும் நடைபாதையை சுத்தப்படுத்தினார்.
நடைபாதையை ஒட்டி இருக்கும் பழைய இரும்பு தகடுகளுக்கு, வர்ணம் பூசினார். பின், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருடன், நடைபாதையில் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
பின், ராஜேந்திர சோழன் அளித்த பேட்டி:
நகரில் உள்ள நடைபாதைகளை சுத்தமாகவும், அழகாகவும் மாற்றுவதும், பாதசாரிகளுக்கு ஏற்ற வகையில் நடைபாதைகளை உருவாக்குவதும் அரசின் முதன்மை நோக்கமாக உள்ளது. அரசு எடுக்கும் முயற்சியில் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும். மெஜஸ்டிக் பஸ் நிலையத்தை சுற்றி பொதுக்கழிப்பறைகள் இருந்தாலும், நடைபாதைகளில் சிறுநீர் கழிக்கின்றனர்; இது தவிர்க்கப்பட வேண்டும். மெஜஸ்டிக்கை சுற்றி 6 கி.மீ., துாரத்தில் உள்ள நடைபாதைகள் வடிவத்தை முழுமையாக மாற்ற வேண்டி உள்ளது. முன்மாதிரி நடைபாதைகளாக மாற்ற நடவடிக்கை எடுப்போம். நடைபாதையில் காலியாக இருக்கும் இடங்கள் மரக்கன்றுகள் நடுவதற்கும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், சுதந்திர பூங்காவில் உள்ள மல்டிபார்க்கில் ஆய்வு செய்தார். நடைபாதைகளில் விட்டு செல்லப்பட்ட குழாய்கள், வயர்களையும்; நடைபாதையில் இளநீர் கடை வைத்திருப்பவர்கள், இளநீர் கூடுகளை அகற்றுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.