sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 சமூக வலைதள பதிவுக்காக வழக்குகள் பதிய நெறிமுறைகள் வெளியீடு

/

 சமூக வலைதள பதிவுக்காக வழக்குகள் பதிய நெறிமுறைகள் வெளியீடு

 சமூக வலைதள பதிவுக்காக வழக்குகள் பதிய நெறிமுறைகள் வெளியீடு

 சமூக வலைதள பதிவுக்காக வழக்குகள் பதிய நெறிமுறைகள் வெளியீடு


ADDED : பிப் 10, 2026 04:17 AM

Google News

ADDED : பிப் 10, 2026 04:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: சமூக வலைதள பதிவுகளுக்காக வழக்கு பதிவு செய்யப்படும் போது, கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை டி.ஜி.பி., சலீம் வெளியிட்டு உள்ளார்.

டி.ஜி.பி., சலீம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சமூக வலைதள பதிவுகளை அடிப்படையாக கொண்டு வழக்குப்பதிவு செய்யப்படும் முன், தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். கலவரம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே, வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

கடுமையான அல்லது ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் தொடர்பான பதிவுகள் இருந்தால், வழக்குகளும் கடுமையாக இருக்க வேண்டும். பெயர் அளவிற்கு வழக்குப்பதிவு செய்யக்கூடாது.

அவதுாறு தொடர்பான புகார்கள் வந்தால், புகார்தாரரை நீதிமன்றத்தை அணுகும்படி கூற வேண்டும்.

அரசியல் பதிவுகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்வதற்கு முன், வக்கீல்களிடம் அறிவுரை கேட்பது நல்லது. புகார்தாரர் பாதிக்கப்பட்ட நபராக இருக்க வேண்டும். தொடர்பில்லாத நபர்களிடமிருந்து வரும் புகார்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us