
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ல் அவுட்
எனக்கும் ஆசை! கட்சி எம்.எல்.ஏ.,க்களை, முதல்வர் சித்தராமையா உணவுக்கு அழைத்ததற்கு, சிறப்பு அர்த்தம் கற்பிக்க வேண்டாம். 12 முதல் 15 அமைச்சர்கள் நீக்கப்படுவர் என்கின்றனர். இதை பற்றி கட்சி மேலிடம், முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு மட்டுமே தகவல் தெரியும். எங்களுக்கு தெரியாது. எனக்கும் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அமைச்சரவையை மாற்றி அமைத்தால், எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என, நம்புகிறேன். ஆனாலும் முதல்வரும், மேலிடமும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். - நிங்கரட்டி ஹனமரட்டி கோனரட்டி, காங்., - எம்.எல்.ஏ., நவல்குண்ட் தொகுதி
மறைமுக மிரட்டல்! அமைச்சரவையை மாற்றி அமைத்து, பதவியில் இருந்து துாக்குவேன் என, துணை முதல்வர் சிவகுமாரையும், அவரது ஆதரவாளர்களையும் முதல்வர் சித்தராமையா மறைமுகமாக பயமுறுத்துகிறார். பெயருக்கு மட்டுமே பசவண்ணர் கொள்கைகளை பின்பற்றுவதாக சித்தராமையா கூறுகிறார். ஆனால் அவரது இதயத்தை பிளந்தால், பசவண்ணர் தென்படமாட்டார். சோனியாவும், ராகுலும் தென்படுவர். முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொள்ள, ராகுல், சோனியாவின் படங்களை வைத்துள்ளார். - கே.எஸ்.ஈஸ்வரப்பா, முன்னாள் அமைச்சர்
கப்பம் கட்டுவதில் போட்டி! மைசூரு போலீசாருக்கு, முதல்வர் சித்தராமையா மகன் யதீந்திராவின் தொந்தரவு அதிகரித்துள்ளது. அவர் இடமாற்ற துறை அமைச்சர். எந்த இடமாற்றம் என்றாலும், முதல்வரின் மகனுக்கு கப்பம் கட்ட வேண்டும். ராகுலுக்கு யார் அதிகமாக வசூலித்து கொடுப்பது என்ற விஷயத்தில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையே போட்டியே ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சீட்டாட்டம் நடக்கும் இடத்தை சோதனையிடவும் போலீசார் தயங்குகின்றனர். எந்த அமைச்சர், எம்.எல்.ஏ.,விடம் போன் வருமோ என, அஞ்சுகின்றனர். - பிரதாப் சிம்ஹா, முன்னாள் எம்.பி., பா.ஜ.,