நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருவருப்பு அரசியல் மாநிலத்தில் முதல்வர் மாற்றம், அதிகார பகிர்வு குறித்து பேசப்படுகிறது. துணை முதல்வர் சிவகுமார், முதல்வராக வேண்டும். கர்நாடகாவில் காங்கிரசை பலப்படுத்தவும்,
கடந்த சட்டசபை தேர்தலில் கட்சியை ஆட்சியில் அமர்த்தியதிலும் இவரது பங்களிப்பு அதிகம். முதல்வர் பதவியில் அமர, அனைத்து தகுதிகளும் சிவகுமாருக்கு உள்ளன. அவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். சமீப நாட்களாக பா.ஜ.,வின் முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹாவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வரும் மிக மோசமாக பேசிக்கொள்கின்றனர். இவர்களின் விமர்சனங்களை கேட்கும்போது, மிகவும் அருவருப்பாக உள்ளது. தாயை பற்றி பேசுவது ஏற்புடையது அல்ல. இத்தகைய அநாகரிகமான பேச்சுகள், கீழ்த்தரமான அரசியல் ஆகும். இருவரையும் உதைத்து, உள்ளே தள்ள வேண்டும். - விஸ்வநாத், எம்.எல்.சி., - பா.ஜ.,

