ADDED : பிப் 07, 2026 06:38 AM

அல்வாவில் பல வகைகள் உள்ளன. அதில், இது புதுவகை என்று கூறலாம். ஆம்... உண்மை தான், பஞ்சாபி ஸ்டைலில் பாதாம் அல்வா செய்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்
பாதாம் -- 250 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
கோதுமை மாவு - 1 டீஸ்பூன்
குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் துாள் - 1 டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய் துாள், சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து எடுக்கவும். பின், பாதாமை சிறிது நேரம் ஊறவைத்து, அதன் தோல் நீக்கி மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், கோதுமை மாவை சேர்த்து சிறிது நேரம் கலந்து விடவும். பின் அரைத்து வைத்துள்ள பாதாமை சேர்த்து நன்கு கலந்து, காய்ச்சி வைத்துள்ள சர்க்கரை பாகு, நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும். நெய் நன்கு பிரிந்து பாதாம் நன்கு கலர் மாறி வந்ததும் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான, பஞ்சாபி ஸ்டைல் பாதாம் அல்வா'தயார். இதை நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு செய்து தரலாம்.
- நமது நிருபர் -:

