/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கல்குவாரி நிலச்சரிவு தொழிலாளி பலி
/
கல்குவாரி நிலச்சரிவு தொழிலாளி பலி
ADDED : ஜூன் 06, 2025 11:30 PM
ஹாசன்: கல்குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
ஹாசன், துமகேரே கிராமத்தில் உள்ள கல்குவாரியில் நேற்று முன்தினம் இரவு தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் மண், பாறைகள் தொழிலாளிகள் மீது விழுந்தன.
இதில், குவாரியில் இருந்த ஆறு தொழிலாளர்கள் சிக்கினர். தகவல் அறிந்து வந்த சாந்திகிராம போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து, சிக்கியவர்களை மீட்டனர். காயம் அடைந்தவர்களை ஹாசனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும், மணி, 40, என்ற தொழிலாளி மேல்சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார். அப்போது, அவர் உயிர் பிரிந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், சாவை மறைப்பதற்காக இறந்தவர் உடலை எரிக்க திட்டமிட்ட, குவாரி உரிமையாளர் தேவராஜ், அவரது மகன் அர்ஜுன், குவாரி பொறுப்பாளர் பிரகாஷ் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.