தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சவால்களை படிக்கட்டுகளாக்கி பதக்கங்களை அள்ளும் ராதா

சவால்களை படிக்கட்டுகளாக்கி பதக்கங்களை அள்ளும் ராதா

சவால்களை படிக்கட்டுகளாக்கி பதக்கங்களை அள்ளும் ராதா


UPDATED : அக் 23, 2026 12:00 AM

ADDED : அக் 22, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 12:00 AM ADDED : அக் 22, 2026 08:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –: இன்றைய இளம் தலைமுறையினருக்கு சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் அதிகம் உள்ளது. மன உறுதியும், சாதிக்க வேண்டும் என்ற பிடிவாதமும் இருந்தால் போதும். உடல் ஊனம் தடையல்ல என்பதை, விவசாயி மகள் நிரூபித்துள்ளார்.

சித்ரதுர்கா மாவட்டம், செல்லகெரே தாலுகாவின் பொம்ம சமுத்ரா கிராமத்தை சேர்ந்தவர் ராதா வெங்கடேஷ். இவர் விவசாயி மகள். பார்வை குறைபாடுள்ள இவர், விளையாட்டில் பல சாதனைகளை செய்துள்ளார். இதுவரை தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, 16 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார். 2018ல் ஏஷியன் பாராகேம்ஸ் போட்டிகளில் பங்கேற்று, வெள்ளி மற்றும் தங்கப்பதக்கம் பெற்றார்.

கடந்த 2023ல் நடந்த ஆசிய போட்டிகளில் பங்கேற்று, தங்கம் வென்று நாட்டின் பெருமையை, சர்வதேச அளவில் உயர்த்தினார்.

2025 மற்றும், 2026ல் நடந்த விளையாட்டு போட்டிகளிலும் தங்க பதக்கங்களை வென்றுள்ளார். ஜப்பானில் இம்மாதம் 17 முதல், 26 வரை நடக்கும், பிரபலமான பாரா அத்லெடிகஸ் விளையாட்டு போட்டியில், 1,500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில், ராதா பங்கேற்றுள்ளார். இவருக்கு இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சியாளர் ராகுல் பாலகிருஷ்ணா பயிற்சி அளித்து வருகிறார்.

கிராமத்தில் இருந்து வந்து விளையாட்டு உலகில் அபார சாதனை செய்யும் ராதாவின் திறமையை, அடையாளம் கண்ட கர்நாடக அரசு, அவருக்கு அரசு பணி வழங்கியுள்ளது. தற்போது பெங்களூரின் தொழிலாளர் நலத்துறையில் பணியாற்றுகிறார். ராதாவுக்கு, ‘ஏகலவ்யா’ விருது உட்பட பல விருதுகள் கிடைத்துள்ளன.

சவால்களை படிக்கட்டுகளாக்கி, சர்வதேச அளவில் ஜொலிக்கும் ராதா, மேலும் உயரத்துக்கு செல்ல வேண்டும் என, பலரும் வாழ்த்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us