/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராகுலுக்கு முழங்காலில் மூளை : எத்னால் கிண்டல்
/
ராகுலுக்கு முழங்காலில் மூளை : எத்னால் கிண்டல்
ADDED : ஆக 11, 2025 04:48 AM

பாகல்கோட்: ''லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பச்சிளம் குழந்தை. இவருக்கு மூளை, முழங்காலில் உள்ளது,'' என எம்.எல்.ஏ., - பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார்.
பாகல்கோட்டில், நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பச்சிளம் குழந்தை. அனைவருக்கும் தலையில் மூளை உள்ளது. ஆனால் ராகுலுக்கு மட்டும் முழங்காலில் உள்ளது. இதனால் தான் அவர், தேவையில்லாமல் இது போன்று குற்றம்சாட்டுகிறார். கள்ள ஓட்டுகள் போட்டு, ஆட்சியை பிடித்தது, காங்கிரஸ் தானே தவிர, பா.ஜ., அல்ல. இதற்கு ராகுலின் கொள்ளுத் தாத்தா நேரு சிறந்த உதாரணம்.
ஒரு முறை ராகுல், வரலாற்று பக்கங்களை திருப்பிப்பார்க்க வேண்டும். அந்த காலத்தில் யாரை பிரதமராக்குவது என, முடிவு செய்ய வேண்டிய நிலை வந்த போது, 15 மாநிலங்களில், 14 மாநிலங்கள் சர்தார் வல்லபாய் படேலை ஆதரித்து ஓட்டு போட்டன. ஆனால் ஒரே ஒரு ஓட்டு பெற்ற நேரு பிரதமாரானார். எனவே ஓட்டு திருட்டு குறித்து பேச, ராகுலுக்கு தகுதி இல்லை.
ராஜ் நாராயணனை தோற்கடித்து, இந்திரா வெற்றி பெற்றது கள்ள ஓட்டுகளால்தான். இதனால் அலஹாபாத் உயர் நீதிமன்றம், இந்திராவின் எம்.பி., பதவியை ரத்து செய்தது. இதையறியாமல் ராகுல், சிறுபிள்ளைத்தனமாக, பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.