தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பிரபல கட்டுமான நிறுவன இயக்குநர் வீட்டில் 'ரெய்டு'

 பிரபல கட்டுமான நிறுவன இயக்குநர் வீட்டில் 'ரெய்டு'

 பிரபல கட்டுமான நிறுவன இயக்குநர் வீட்டில் 'ரெய்டு'


ADDED : மார் 17, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, மந்திரி டெவலப்பர்ஸ் கட்டுமான நிறுவன இயக்குநர் வீடுகள் மற்றும் அலுவலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

பெங்களூரு அசோக்நகர் விட்டல் மல்லையா ரோட்டில், மந்திரி டெவலப்பர்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்கிறது.

இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வழங்க பணம் பெற்று கொண்டு, வீடுகளை ஒதுக்கவில்லை என்று, 2022 ம் ஆண்டு நிறுவனத்தின் மீது, சுப்பிரமணியநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது.

சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்தது தெரியவந்ததால், ஈ.டி., எனும் அமலாக்கத்துறை விசாரித்தது. நிறுவனத்திற்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் முடக்கப்பட்டது.

இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பின், மந்திரி டெவலப்பர்ஸ் நிறுவன அலுவலகம், நிறுவன இயக்குநர் சுஷில் மந்திரியின் இரண்டு வீடுகளில் நேற்று காலை 7:00 மணியில் இருந்து, டில்லியில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சில முக்கிய ஆவணங்களை சரிபார்த்து விபரங்களை கேட்டறிந்தனர். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும், திட்டங்கள் குறித்தும் தகவல் பெற்றனர்.

இந்த திடீர் சோதனை ஏன் என்று தெரியவில்லை. 2022ல் நடத்தப்பட்டதன் தொடர்ச்சியா அல்லது தற்போதும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததா என்பது பற்றிய தகவல் இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us