/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
5 அரசு அதிகாரிகள் வீடுகளில் 'ரெய்டு' ரூ.24 கோடி மதிப்பு சொத்து பறிமுதல்
/
5 அரசு அதிகாரிகள் வீடுகளில் 'ரெய்டு' ரூ.24 கோடி மதிப்பு சொத்து பறிமுதல்
5 அரசு அதிகாரிகள் வீடுகளில் 'ரெய்டு' ரூ.24 கோடி மதிப்பு சொத்து பறிமுதல்
5 அரசு அதிகாரிகள் வீடுகளில் 'ரெய்டு' ரூ.24 கோடி மதிப்பு சொத்து பறிமுதல்
ADDED : ஜூலை 30, 2025 07:48 AM

பெங்களூரு : கர்நாடகாவில், ஐந்து அரசு அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாக 24.44 கோடி ரூபாய்க்கு சொத்து குவித்தது, லோக் ஆயுக்தா நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளது.
பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின், தோட்டக்கலைத் துறை மூத்த உதவி இயக்குநர் ஓம்பிரகாஷ்; பெங்களூரு மாநகராட்சியின் ஷெட்டிஹள்ளி துணை மண்டல வரி கணக்கீட்டாளர் என்.வெங்கடேஷ்; சித்ரதுர்கா ஹிரியூர் தாலுகா சுகாதார அதிகாரி ஜி.வெங்கடேஷ்...
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் ஹாசன் மண்டல செயற் பொறியாளர் ஜெயண்ணா; சிக்கபல்லாபூர் கவுரிபிதனுாரில் குடிநீர் சுத்திகரிப்புத் துறை ஜுனியர் இன்ஜினியர் ஆஞ்சநேய மூர்த்தி ஆகிய ஐந்து அதிகாரிகளும் தங்கள் வருமானத்திற்கு அதிகமா௦க சொத்து சேர்த்திருப்பதாக, லோக் ஆயுக்தா போலீசாருக்கு புகார்கள் சென்றன.
இதன் அடிப்படையில் ஐந்து அதிகாரிகளின் வீடுகளிலும் நேற்று காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை, லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். பெங்களூரு, சித்ரதுர்கா, ஹாசன், சிக்கபல்லாபூர் மாவட்டங்களில் 25 இடங்களில் சோதனை நடந்தது.
சோதனையின் முடிவில் ஐந்து அதிகாரிகளும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தெரிந்தது. இவர்களின் வீடுகளில் இருந்து தங்க நகைகள், பணம், வாகனங்கள், நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவை சிக்கின. இவர்கள் மொத்தமாக 24.44 கோடி ரூபாய்க்கு சொத்து குவித்தது தெரிய வந்துள்ளது.
கடந்த 23ம் தேதி ஐ.ஏ.எஸ்., அதிகாரி வசந்தி அமர் உட்பட எட்டு அரசு அதிகாரிகள் வீடுகளில், லோக் ஆயுக்தா நடத்திய சோதனையில் 37.41 கோடி ரூபாய்க்கு சொத்து குவித்தது தெரிய வந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்குள் மேலும் 5 அரசு அதிகாரிகள் வீடுகளில், லோக் ஆயுக்தா சோதனை நடத்தி இருப்பது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள, அதிகாரிகளை கதி கலங்க வைத்துள்ளது.