/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயலில் மழை இயல்பு நிலை பாதிப்பு
/
தங்கவயலில் மழை இயல்பு நிலை பாதிப்பு
ADDED : மே 18, 2025 11:11 PM

தங்கவயல்: தங்கவயலில் மாலையில் துவங்கி இரவு வரையில் மழை பெய்வதால், தங்கவயல் சாலைகளில் நடமாட்டம் குறைவதுடன் வர்த்தகமும் பாதித்துள்ளது.
தங்கவயலில் ஐந்து நாட்களாக இடி, மின்னல், பலத்த காற்றுடன், மழை பெய்து வருகிறது. இயல்பு நிலையும் பாதித்துள்ளது. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தங்கவயலில் உரிகம் என்.டி., பிளாக் பகுதியில் வேப்ப மரக்கிளை ஒன்று, ஒரு வீட்டின் மீது விழுந்தது. இதனால் சிமென்ட் ஓடு உடைந்தது.
ஆண்டர்சன் பேட்டை முக்கிய சாலையில் பட்டுப் போன மரம் ஒன்று விழும் ஆபத்தில் இருந்தது. அதனை அகற்ற வேண்டும் என்று நகராட்சியில் அப்பகுதியினர் புகார் செய்தனர். இதன் பேரில் நேற்று அந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
பெமல் நகர் பகுதியில் பெமல் தொழிற்சாலை முதல் வழிநெடுகிலும் உள்ள பல மரங்கள் பட்டுப் போய் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழலாம். பாதிப்பு ஏற்படுவதற்குள் பெமல் நிறுவனமோ அல்லது கர்நாடக அரசின் வனத்துறையோ கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.