தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மழை நீர் கால்வாய் பணி தங்கவயல் எம்.எல்.ஏ., ஆய்வு

 மழை நீர் கால்வாய் பணி தங்கவயல் எம்.எல்.ஏ., ஆய்வு

 மழை நீர் கால்வாய் பணி தங்கவயல் எம்.எல்.ஏ., ஆய்வு


ADDED : மே 30, 2026 02:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 02:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயலில் வடிகால், மழை நீர் கால்வாய்களை சுத்தப்படுத்தி, சேறு சகதிகளை அகற்றும் பணிகளை, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா நேற்று ஆய்வு செய்தார்.

ராபர்ட்சன்பேட்டை, உரிகம்பேட்டை பகுதிகளில் மழை நீர் செல்லும் கால்வாய்களில் மண், பல்வேறு பிளாஸ்டிக் குப்பை குவிந்து, மழை நீர் சீராக செல்ல முடியாமல், குடியிருப்பு வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த கால்வாய்களை சுத்தப்படுத்தி, சேறும், சகதிகள் அகற்றும் பணிகளை தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.

மழைக்காலம் துவங்குவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் கால்வாய், வடிகால்களை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். கால்வாய்களில் குப்பையை கொட்டாத வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு நகராட்சி ஆணையர் ஸ்ரீதருக்கு அவர் அறிவுறுத் தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us