/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹிந்தி தினத்துக்கு எதிர்ப்பு ரக் ஷன வேதிகே போராட்டம்
/
ஹிந்தி தினத்துக்கு எதிர்ப்பு ரக் ஷன வேதிகே போராட்டம்
ஹிந்தி தினத்துக்கு எதிர்ப்பு ரக் ஷன வேதிகே போராட்டம்
ஹிந்தி தினத்துக்கு எதிர்ப்பு ரக் ஷன வேதிகே போராட்டம்
ADDED : செப் 16, 2025 05:17 AM
பெங்களூரு: பெங்களூரில் ரயில்வே துறையில் பணி செய்யும் வடமாநில அதிகாரிகள், ஊழியர்கள் ஹிந்தி தினம் கொண்டாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக ரக் ஷன வேதிகே அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரில் ரயில்வே துறையில் பணி செய்யும் வடமாநில அதிகாரிகள், ஊழியர்கள், காந்திநகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று ஹிந்தி தினம் கொண்டாடினர்.
இதுபற்றி அறிந்த கர்நாடக ரக் ஷன வேதிகே அமைப்பின் பெண் தொண்டர்கள், ஹோட்டலுக்குள் புகுந்தனர்.
ஹிந்தி தினம் கொண்டாடிய இடத்திற்கு சென்று கோஷம் எழுப்பினர். 'இங்கு பணியாற்றிவிட்டு, ஹிந்தி தினம் எப்படி கொண்டாடுகிறீர்கள்?' என்று வாக்குவாதம் செய்தனர்.
ஹிந்தி தின நிகழ்ச்சிக்காக பொருத்தப்பட்டிருந்த பேனர்களை கிழித்தனர். தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். தகவல் அறிந்த உப்பார்பேட் போலீசார் அங்கு சென்று, போராட்டம் நடத்திய பெண்களை சமாதானம் செய்து அனுப்பினர். இப்போராட்டத்தால் ஹிந்தி தினம் கொண்டாட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.