/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறிய கோவில்கள் மேம்பாடு ராமலிங்க ரெட்டி தகவல்
/
சிறிய கோவில்கள் மேம்பாடு ராமலிங்க ரெட்டி தகவல்
ADDED : ஜூலை 01, 2025 03:43 AM

தட்சிணகன்னடா: ''குக்கே சுப்ரமண்யா போன்ற, பணக்கார கோவில்களின் நிதியுதவியால், 'சி' பிரிவு கோவில்கள் மேம்படுத்தப்படுகின்றன,'' என ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்தார்.
தட்சிணகன்னடா, சுள்ளியாவில் உள்ள குக்கே சுப்ரமண்யாவில், நேற்று அவர் அளித்த பேட்டி:
'ஏ' மற்றும் 'பி' பிரிவு கோவில்களின் வளர்ச்சிக்கு, தேவையான நிதியுதவி அந்தந்த கோவில்களில் இருந்தே கிடைக்கிறது. ஆனால் 'சி' பிரிவு கோவில்களுக்கு, வருவாய் பற்றாக்குறை உள்ளதால், தேவையான நிதியுதவி கிடைப்பது இல்லை. எனவே பணக்கார கோவில்களின் நிதியால், மற்ற கோவில்கள் மேம்படுத்தப்படுகின்றன.
குக்கே சுப்ரமண்யா கோவிலுக்கு, மேம்பாட்டு ஆணையம் அமைக்க வேண்டும் என, பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவிலில் அரசு சார்பில் வளர்ச்சி பணிகள் செய்யப்படுகின்றன. எனவே மூன்று ஆண்டுகளுக்கு, மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்படாது. மங்களூரு விமான நிலையத்தில் இருந்து, குக்கே சுப்ரமண்யாவுக்கு ஒரு மாதத்துக்குள் பஸ் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.