/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தனியார் கோவில்களுக்கு ராமலிங்க ரெட்டி எச்சரிக்கை
/
தனியார் கோவில்களுக்கு ராமலிங்க ரெட்டி எச்சரிக்கை
ADDED : நவ 03, 2025 04:54 AM

ராம்நகர்: ''கர்நாடகாவில் உள்ள தனியார் கோவில்களை ஹிந்து அறநிலைய துறைக்குள் கொண்டு வரும் எண்ணம் இல்லை. அதேவேளையில், இத்தகைய கோவில்களில் பிரச்னைகள் ஏற்பட்டு தீர்க்கப்படாமல் இருந்தால், அவை கைப்பற்றப்படும்,'' என, மாநில ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
பெங்களூரு தெற்கு மாவட்டம், ராம்நகரில் அவர் அளித்த பேட்டி:
தனியார் கோவில்களை, ஹிந்து அறநிலைய துறையின் கீழ் கொண்டுவரும் எண்ணம் அரசுக்கு இல்லை. அதேவேளையில், தனியார் கோவிலில், அதன் நிர்வாக குழு அல்லது உறுப்பினர்கள் சண்டையிட்டு நீதிமன்றத்துக்கு சென்றும், பிரச்னை தீர்க்கப்படாமல், சர்ச்சை அதிகரித்தால், கோவிலை அரசு கைப்பற்றும்.
மாநிலத்தில் 35,000 கோவில்கள் அரசின் ஹிந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. 'ஏ', 'பி', 'சி' என கோவில்கள் பிரித்து வைக்கப்பட்டு உள்ளன.
எங்களுக்கு எந்த தனியார் கோவில்களும் வேண்டாம். அவர்கள் விரும்பினால், நாங்கள் 100 கோவில்களை அமைப்புகள், மடங்களுக்கு கொடுக்க தயாராக உள்ளோம். அவர்கள், அக்கோவிலை மேம்படுத்தி, மீண்டும் அரசுக்கு கொடுக்கட்டும். கோவில் விஷயத்தில் பொறுப்பான முடிவுகள் எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

