தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/நடிகர் அம்பரீசுக்கு 'கர்நாடக ரத்னா' விருது ராமலிங்க ரெட்டி கடிதம்

நடிகர் அம்பரீசுக்கு 'கர்நாடக ரத்னா' விருது ராமலிங்க ரெட்டி கடிதம்

நடிகர் அம்பரீசுக்கு 'கர்நாடக ரத்னா' விருது ராமலிங்க ரெட்டி கடிதம்


UPDATED : அக் 07, 2026 12:00 AM

ADDED : அக் 06, 2026 10:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 12:00 AM ADDED : அக் 06, 2026 10:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'மறைந்த நடிகர் அம்பரீசுக்கு, 'கர்நாடக ரத்னா' விருது வழங்க வேண்டும்' என, மாநில அரசுக்கு, வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

கன்னடம், கலாசார துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகிக்கு, அமைச்சர் ராமலிங்க ரெட்டி எழுதியுள்ள கடிதம்:

கன்னட வெள்ளித்திரையில், 'ரிபெல் ஸ்டார்' என்று அழைக்கப்பட்டவர் மறைந்த நடிகர் அம்பரீஷ். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, கோடிக்கணக்கான கன்னடர்களின் இதயங்களை கவர்ந்தவர்.

திரையுலகின் இன்னல்களுக்கு தீர்வு காண்பதிலும், கலைஞர்களின் நலன்களை பாதுகாப்பதிலும் அவர் எப்போதும் முன்னணியில் இருந்தார். அரசியலில், எம்.எல்.ஏ., - எம்.பி., மாநில, மத்தியமைச்சர் என நாட்டின் வளர்ச்சிக்கு, குறிப்பாக மாண்டியா மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு விவசாயிகளின் நலனுக்காக பணியாற்றி உள்ளார்.

அவரின் மரணத்துக்கு பின், 'கர்நாடக ரத்னா' விருது வழங்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். அவருக்கு அளிக்கப்படும் இந்த கவுரவம், ஒவ்வொரு கன்னடருக்கு உரிய கவுரவமாகும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

நவ., 1ம் தேதி கன்னட ராஜ்யோத்சவாவின் போது, அம்பரீசுக்கு, கர்நாடக ரத்னா விருதை, மாநில அரசு அறிவிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us