தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கர்நாடகாவின் வடமாவட்டங்களில் ரஞ்சி போட்டிகள் நடத்த திட்டம்

கர்நாடகாவின் வடமாவட்டங்களில் ரஞ்சி போட்டிகள் நடத்த திட்டம்

கர்நாடகாவின் வடமாவட்டங்களில் ரஞ்சி போட்டிகள் நடத்த திட்டம்


UPDATED : நவ 20, 2026 12:00 AM

ADDED : நவ 19, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 12:00 AM ADDED : நவ 19, 2026 07:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கதக்: ‘‘கர்நாடகாவின் வடமாவட்டங்களிலும் ரஞ்சி கிரிக்கெட் போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன,’’ என, கே.எஸ்.சி.ஏ., தலைவர் வெங்கடேஷ் பிரசாத் கூறினார்.

கதக்கின் பெட்டகேரி தாலுகா நரசாபுராவில் கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் புதிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கே.எஸ்.சி.ஏ., தலைவர் வெங்கடேஷ் பிரசாத் கலந்து கொண்டார்.

அவர் பேசியதாவது:

நான் உண்மையான கன்னடிகன். கன்னட மண்ணின் மைந்தன்.

கடந்த 20 ஆண்டுக்கு முன்பு கதக்கில் உள்ள கிரிக்கெட் வீரர் சுனில் ஜோஷி வீட்டிற்கு வந்தேன். அதன்பின், இப்போது தான் இங்கு வருகிறேன்.

கர்நாடக கிரிக்கெட் என்பது பெங்களூருக்குள் மட்டும் முடங்கி விடக்கூடாது. வடமாவட்டங்களை சேர்ந்த திறமையான கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை தேடி பெங்களூரு வர வேண்டும் என்று அவசியம் இல்லை.

திறமை இருக்கும் இடத்தில் தான் கிரிக்கெட் வளர வேண்டும்.

மாநிலத்தின் அனைத்து பகுதியை சேர்ந்த வீரர்களுக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும். இளம் கிரிக்கெட் வீரர்கள் சொந்த ஊரில் பயிற்சி செய்யும் சூழ்நிலையை உருவாக்குவது தான் கே.எஸ்.சி.ஏ.,வின் நோக்கம்.

கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, ஹூப்பள்ளி, ஷிவமொக்காவில் ரஞ்சி போட்டிகள் நடக்கின்றன. கதக், பெலகாவி உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கதக்கில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் கட்டப்படும். தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும். பயிற்சி அகாடமி நிறுவவும் முன்னுரிமை அளிக்கப்படும். 2028 க்குள் மைதானத்தை கட்டி முடித்து போட்டிகளை நடத்துவோம். முதல் கட்டமாக 3 கோடி ரூபாயில் பணிகள் துவங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us