தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/துாக்க மாத்திரை தின்ற மணமகன் திருமண மண்டபத்தில் பரபரப்பு

துாக்க மாத்திரை தின்ற மணமகன் திருமண மண்டபத்தில் பரபரப்பு

துாக்க மாத்திரை தின்ற மணமகன் திருமண மண்டபத்தில் பரபரப்பு


UPDATED : நவ 20, 2026 12:00 AM

ADDED : நவ 19, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 12:00 AM ADDED : நவ 19, 2026 07:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துமகூரு: தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறி, மணமகன் துாக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சித்ததால், பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

துமகூரு மாவட்டம், பாவகடா போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றுபவர் சம்பத், 30. இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆந்திராவின் மடகஷிராவில் உள்ள திருமண மண்டபத்தில், நேற்று முகூர்த்தம் நிர்ணயிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் மாலை வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக இரண்டு குடும்பத்தினரும் தயாராகினர்.

இந்நிலையில் சம்பத், கடைசி விநாடியில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறி பிடிவாதம் பிடித்தார். அது மட்டுமின்றி, துாக்க மாத்திரை தின்று, தற்கொலைக்கும் முயற்சித்தார்.

பீதியடைந்த இரண்டு குடும்பத்தினரும், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பின் காப்பாற்றப்பட்டார்.

இரண்டு குடும்பத்தினரின் மூத்தவர்கள், சம்பத்தின் செயலை கண்டித்து அறிவுரை கூறிய பின், மனம் மாறி திருமணத்துக்கு சம்மதித்தார்.

மருத்துவமனையில் இருந்து நேற்று காலை திருமண மண்டபத்துக்கு வந்து, மணமகளுக்கு தாலி கட்டினார். அதன்பின் இரண்டு குடும்பத்தினரும் நிம்மதி அடைந்தனர்.

மணமகனின் செயலால், திருமண மண்டபத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இது தொடர்பாக பெண் வீட்டார் கூறியதாவது:

சம்பத்தின் குடும்பத்தினரே, எங்கள் வீட்டுக்கு வந்து பெண் கேட்டனர். அதன்பின் நாங்களும் அவர்களின் வீட்டுக்கு சென்று, பேச்சு நடத்தி திருமணம் முடிவு செய்தோம். சம்பத்தும் திருமணத்துக்கு சம்மதித்தார்.

எங்கள் மகளும் சம்மதித்தார். சம்பத்தே அழைப்பிதழ் அச்சிட்டு, உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தார்.

திருமண வரவேற்பு நடக்கும் நேரத்தில், தனக்கு திருமணம் வேண்டாம் என கூறி துாக்க மாத்திரை தின்று எங்களை அதிர்ச்சியடைய செய்தார். சிகிச்சைக்கு பின் மனம் மாறி, திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us