ADDED : ஆக 12, 2025 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : தங்கம் கடத்திய நடிகை ரன்யா ராவின் தந்தையான, டி.ஜி.பி., ராமசந்திர ராவுக்கு அரசு புதிய பொறுப்பு அளித்துள்ளது.
கர்நாடக வீட்டு வசதி உள்கட்டமைப்பு துறை டி.ஜி.பி.,யாக பணியாற்றியவர் ராமசந்திர ராவ். இவரது வளர்ப்பு மகள் ரன்யா ராவ். நடிகையான இவர் துபாயில் இருந்து 12 கோடி ரூபாய் தங்கம் கடத்திய வழக்கில், கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் ராமசந்திர ராவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அவரை கட்டாய விடுப்பில் அரசு அனுப்பியது. இந்நிலையில் ஐந்து மாதங்களுக்கு பின், சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரக டி.ஜி.பி.,யாக அவரை நியமித்து, அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.