தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ புதியவர்களுக்கு அமைச்சர் பதவி ரவி கானிகா வலியுறுத்தல்

 புதியவர்களுக்கு அமைச்சர் பதவி ரவி கானிகா வலியுறுத்தல்

 புதியவர்களுக்கு அமைச்சர் பதவி ரவி கானிகா வலியுறுத்தல்


ADDED : ஏப் 13, 2026 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 01:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாண்டியா: திறமையாக பணியாற்றாத அமைச்சர்களை நீக்கி விட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது நல்லது, என மாண்டியா காங்., - எம்.எல்.ஏ., ரவி கானிகா வலியுறுத்தினார்.

மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

எம்.எல்.ஏ.,க்கள் பலருக்கும், அமைச்சராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. மூன்று, நான்கு முறை எம்.எல்.ஏ.,வானவர்கள், அமைச்சர் பதவி கேட்கின்றனர்.

இது தொடர்பாக, கட்சி மேலிடத்தை சந்திக்க டில்லிக்கு செல்கின்றனர். அவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்து, மாநிலத்துக்கு சேவை செய்யட்டும். அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டும் என்பது குறித்து, நான் உட்பட, 38 எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் எழுதியுள்ளோம்.

புதிதாக எம்.எல்.ஏ.,வான ஐவருக்கு, அமைச்சர் பதவி வழங்கும்படி கோரியுள்ளோம். எங்களின் இந்த கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. தனிப்பட்ட முறையில், எனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை.

தற்போது பதவியில் உள்ள சில அமைச்சர்கள், சரியாக பணியாற்றுவது இல்லை. இவர்கள் மக்களை சந்திப்பது இல்லை. இதனால் வளர்ச்சி பணிகளுக்கு பின்னடைவு ஏற்படுகிறது.

இவர்கள் தேவலோகத்தில் இருந்து வந்தவர்கள் இல்லை. பணியாற்றாத அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஆனால் இதை பற்றி முதல்வரும், மேலிடமும் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us