தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல்., விளையாட ஆர்.சி.பி., அணி சம்மதம்

 சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல்., விளையாட ஆர்.சி.பி., அணி சம்மதம்

 சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல்., விளையாட ஆர்.சி.பி., அணி சம்மதம்


ADDED : மார் 04, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் விளையாட, ஆர்.சி.பி., அணி சம்மதம் தெரிவித்து உள்ளது.

ஐ.பி.எல்., எனும், இந்தியன் பிரிமியர் கிரிக்கெட் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை, 18 ஆண்டு போட்டிகள் நடந்து உள்ளன. இம்மாத இறுதியில் ஐ.பி.எல்., 19 வது சீசன் துவங்க வாய்ப்பு உள்ளது.

கடந்த ஆண்டு ஐ.பி.எல்., இறுதி போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி, ஆர்.சி.பி., எனும் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதனை கொண்டாடும் வகையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

11 பேர் பலி அப்போது, மைதானம் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் இறந்தனர்.

இதுதொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் சங்கம், ஆர்.சி.பி., அணி நிர்வாக உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவானது. இவ்வழக்கை சி.ஐ.டி., விசாரிக்கும் நிலையில், ஓய்வு நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையில், நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

விசாரணை கமிஷன் அறிக்கை அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. 11 பேர் பலி எதிரொலியாக சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தடை விதித்து அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் சங்க புதிய தலைவர் வெங்கடேஷ் பிரசாத், நிர்வாகிகள், சின்னசாமி மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முயற்சி எடுத்தனர். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரை சந்தித்து பேசினர். நீதிபதி மைக்கேல் குன்ஹாவின் பரிந்துரைகளை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும் கூறினர்.

அரசு மீது அதிருப்தி நீண்ட விவாதத்திற்கு பின், சின்னசாமி மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடத்த, கர்நாடக அமைச்சரவையில் ஒப்புதல் கிடைத்தது. ஆனால், சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல்., கிரிக்கெட் விளையாட, ஆர்.சி.பி., அணி நிர்வாகம் மறுத்தது.

கூட்ட நெரிசலில், 11 பேர் இறந்த விவகாரத்தில், தங்கள் மீது வழக்குப்பதிவு செய்ததால், கர்நாடக அரசு மீது ஆர்.சி.பி., அணி தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் மேனன் அதிருப்தியில் இருந்தார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட அவர், தற்போது ஜாமினில் உள்ளார்.

மீண்டும் கைதாகி விடுவோம் என்ற அச்சத்தில் இருந்த அவரிடம், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் பேச்சு நடத்தப்பட்டது. இந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால், சின்னசாமி மைதானத்தில் விளையாட, ஆர்.சி.பி., நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது.

5 போட்டிகள் மொத்தம் 14 போட்டிகளில் ஏழு போட்டிகளை பெங்களூரிலும், மற்ற ஏழு போட்டிகளை வேறு மைதானத்திலும் நடத்த வேண்டும். ஆனால், சின்னசாமி மைதானத்தில் 5 போட்டிகள் மட்டுமே விளையாட ஆர்.சி.பி., சம்மதித்து உள்ளது.

மற்ற இரு போட்டிகளை சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் விளையாட உள்ளனர். சின்னசாமி மைதானத்தில் விளையாட உள்ளதை, ஆர்.சி.பி., தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.

இது ஆர்.சி.பி., ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. இந்த ஆண்டு ஐ.பி.எல்., துவக்க போட்டியும், சின்னசாமி மைதானத்திலேயே நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us