/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நாளிதழ் படியுங்கள்: பட்டிமன்ற ராஜா பேச்சு தினமலர், எஸ்.எல்.சி.எஸ்., நடத்திய 'அச்சீவர்ஸ்' கலைவிழா
/
நாளிதழ் படியுங்கள்: பட்டிமன்ற ராஜா பேச்சு தினமலர், எஸ்.எல்.சி.எஸ்., நடத்திய 'அச்சீவர்ஸ்' கலைவிழா
நாளிதழ் படியுங்கள்: பட்டிமன்ற ராஜா பேச்சு தினமலர், எஸ்.எல்.சி.எஸ்., நடத்திய 'அச்சீவர்ஸ்' கலைவிழா
நாளிதழ் படியுங்கள்: பட்டிமன்ற ராஜா பேச்சு தினமலர், எஸ்.எல்.சி.எஸ்., நடத்திய 'அச்சீவர்ஸ்' கலைவிழா
ADDED : டிச 06, 2025 05:56 AM

மதுரை: ''உலக ஞானம் வேண்டுமென்றால் தினமும் நாளிதழ் படிக்க வேண்டும்'' என தினமலர், மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,) சார்பில் கல்லுாரி வளாகத்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான 'அச்சீவர்ஸ்' தின கலைப்போட்டி துவக்கவிழாவில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பேசினார்.
முதல்வர் சுஜாதா முன்னிலை வகித்தார்.
பட்டிமன்ற பேச்சாளர் ராஜா குத்துவிளக்கேற்றி வைத்து பேசியதாவது: சிலருக்கு இயல்பாகவே திறமை இருக்கும். மாணவர்களாகிய உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவது பள்ளிகள் தான். பள்ளிகளில் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படும் போது தான் மாணவர்களின் திறன் வெளிப்படும். அந்த திறமை நாளை உங்களை உயர்த்தும்.
மதுரைக்கு மீனாட்சியம்மன் கோயில் பெருமை என்பதைப் போல மதுரையின் பெருமையாக சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியும் பார்க்கப்படுகிறது. மேற்படிப்பு படிக்க உங்களுக்கான வாய்ப்பைத் தருகிறது தினமலர். எங்களைப் போன்றமாணவர்களை கண்டெடுத்தது ஆசிரியர்கள் தான். எனக்கு மேடைப்பேச்சு வரும் என்று அடையாளம் காட்டியது வகுப்பாசிரியர் தான். அதுபோன்று உங்கள் பள்ளி ஒவ்வொருவரின் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
ஜெயித்தால் மகிழ்ச்சி; தோற்றால் படிப்பினை. இன்றைய மாணவர்கள் வெற்றியை மட்டும் சிந்திக்கின்றனர். வெற்றி தோல்வியை சமமாக பாருங்கள். இந்தத் தலைமுறை அலைபேசியோடு இணைந்துவிட்டது. உலக ஞானம் வேண்டுமென்றால் செய்தித்தாள் படிக்க வேண்டும்.
காலையில் காபி குடிப்பதைப் போல ஏதாவது ஒரு செய்தித்தாளை கண்டிப்பாக வாசிக்க பழக வேண்டும். செய்தி, பார்வை, ஆய்வு என்று மாணவர்கள் அலைபேசியில் இருந்து முன்னோக்கி வரவேண்டும்.
ஆசிரியர்களுக்கு மரியாதை தரவேண்டும்.
இவ்வாறு பேசினார்.
டீன் பிரியா, துணைமுதல்வர் குருபாஸ்கர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான மைம், தனிநடனம், குழுநடனம், தனிப்பாடல், குழுப்பாடல், அடுப்பில்லா சமையல், அறிவியல் கண்காட்சி, வினாடிவினா, லிங்கோபியா, பேஷன் வாக், அலைபேசி போட்டோகிராபி, டேலன்சியா என 12 வகையான போட்டிகள் நடந்தன. ஒருங்கிணைப்பாளர்கள் சாருமதி, அருள் பிரின்ஸ் ராஜ், சாருமதி, ஸ்ரீதேவி ஏற்பாடுகளைச் செய்தனர்.
மதுரை அனுப்பானடி வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை வென்றனர். மகாத்மா குளோபல் கேட்வே பள்ளி மாணவர்கள் இரண்டா மிடம் பெற்றனர்.

