தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தமிழர்களின் அறிவு பட்டை தீட்டப்படுகிறது கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு வாசகர் பாராட்டு

 தமிழர்களின் அறிவு பட்டை தீட்டப்படுகிறது கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு வாசகர் பாராட்டு

 தமிழர்களின் அறிவு பட்டை தீட்டப்படுகிறது கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு வாசகர் பாராட்டு


ADDED : மே 10, 2026 12:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 12:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'தமிழர்கள் அறிவை பட்டை தீட்டும் பணியை செய்கிறது' என்று, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் பற்றி, 'தினமலர்' வாசகர் கண்ணன் நெகிழ்ச்சியுடன் பாராட்டினார்.

பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் சாலை தினமலர் அலுவலகத்தில் உள்ள, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு, குந்தலஹள்ளியில் வசிக்கும் தேசிய விண்வெளி ஆய்வக நிறுவன ஓய்வு விஞ்ஞானி கண்ணன், 74, நேற்று வந்தார்.

ஐந்து பைகள் நிறைய புத்தகங்களை எடுத்து வந்து, நுாலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார். நுாலகத்தில் இருந்த புத்தகங்களை ஆர்வமாக பார்வையிட்டு, 'ஆஹா... என்ன ஒரு அருமையான படைப்பு' என்று கூறி மெய்சிலிர்த்தார்.

பின், அவர் கூறியதாவது:

இன்றைய தினம் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை தந்துள்ளது. நான் அதிகம் விரும்பும் தினமலர் நாளிதழ் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள நுாலகத்திற்கு புத்தகம் கொடுத்ததை எண்ணி, மகிழ்ச்சி கடலில் திளைக்கிறேன்.

நுாலகத்திற்கும் பிரபல எழுத்தாளர்கள் புத்தகங்களை தான் கொடுத்து உள்ளேன்.

ஜானகி ராமன், ஜெயகாந்தன், அனுராதா ரமணன், தேவி பாலா போன்ற எழுத்தாளர்கள் என்னை கவர்ந்தவர்கள்.

புத்தகங்களை படிக்கும் போது நமது மனம் விசாலமாகிறது. புத்தகங்களில் வரும் கதையில் இருப்போர் படும் கஷ்டத்தை விட, நாம் குறைந்த கஷ்டமே படுகிறோம்; நிம்மதியாக வாழ்கிறோம் என்று நினைக்க தோன்றுகிறது.

புத்தகங்கள் நம்மை புதிதாக சிந்திக்க துாண்டும். இந்த நுாலகம், தமிழர்கள் அறிவை பட்டை தீட்டும் பணி செய்கிறது.

உண்மையிலேயே அருமையான முயற்சி. புத்தகங்களை வீட்டில் அலமாரியில் வைத்திருப்பதை விட, படித்த புத்தகங்களை இங்கு வந்து கொடுக்கலாம். அறிவு செல்வம் இங்கிருந்தே பெருகும். நான் வழங்கிய புத்தகங்கள், மற்றவர்களுக்கும் பயன்படும் என்று நினைப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜே.பி.நகரில் வசிக்கும், 'தினமலர்' வாசகி சித்ரா நேற்று தனது மகன் விஜய்குமாருடன் நுாலகத்திற்கு வந்தார். அவரும் ஏராளமான புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி சென்றார்.

ஏழு நாட்களும் பூத்து குலுங்கும் வாரத்தின் ஏழு நாட்களும், காலை 9:30 மணி முதல், இரவு 9:30 மணி வரை, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் இயங்கும். விடுமுறை கிடையாது. நுாலகம் தொடர்பாக 83108 60601, 89715 09091 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us