/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அசோக் தலைமையில் குழு அமைக்க தயார்
/
அசோக் தலைமையில் குழு அமைக்க தயார்
ADDED : நவ 01, 2025 11:18 PM

பெங்களூரு: “பெங்களூரில் சுரங்கப்பாதை திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் அசோக் தலைமையில் குழு அமைக்கவும், நான் தயாராக உள்ளேன்,” என, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பெங்களூரில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிராக, தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறி உள்ளார். அவர் பெங்களூரை சேர்ந்தவர். ஏழாவது முறை எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
சுரங்கப்பாதை திட்டத்தில் அவருக்கும் பொறுப்பு உள்ளது. போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். திட்டத்தை நிறைவேற்ற அவரது தலைமையில் குழு அமைக்கவும், நான் தயாராக உள்ளேன். அந்த குழுவில் அஸ்வத் நாராயணா உட்பட யாரை வேண்டும் என்றாலும் அசோக் சேர்த்துக் கொள்ளட்டும்.
நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். கண்டிப்பாக அதை செய்வோம். அசோக் பரிந்துரையை ஏற்று, லால்பாக் அருகே வாகனங்கள் நுழைவு, வெளியேறும் இடங்கள் அமைக்கப்படும்.
முதல்வர் பதவி குறித்து சித்தராமையாவும், நானும் சொல்வது தான் முக்கியம். வேறு யாருடைய வார்த்தைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.
எம்.இ.எஸ்., அமைப்பு, பெலகாவியில் வசிக்கும் மராத்தியர்களுக்கு தவறான தகவலை அனுப்புகிறது. கர்நாடகாவில் வசிப்பதால் மராத்தியர்களும் கன்னடர்கள் தான்.
மராத்தி பேசுவோர் கூட, நமது சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களாக இருந்துள்ளனர். கர்நாடகாவில் வசிக்கும் பிற மாநிலத்தினர் கன்னடத்தை கற்று பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

