/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
1,222 மரங்கள் காலி: மூன்று பேர் பலி
/
1,222 மரங்கள் காலி: மூன்று பேர் பலி
ADDED : நவ 01, 2025 11:18 PM
பெங்களூரு: 'பெங்களூரில் ஐந்து மாதங்களில் 1,222 மரங்கள் வேருடன் சாய்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர்' என, ஜி.பி.ஏ., வனப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெங்களூரில் காய்ந்த நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றாமல் இருப்பதால், அவை முறிந்து விழும் போதும், வேருடன் சாயும் போதும், வாகன ஓட்டிகள் சிக்கி உயிரிழக்கின்றனர்.
இதுகுறித்து ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய வனப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த மே முதல் செப்டம்பர் வரை ஐந்து மாதங்களில் 1,222 மரங்கள் வேருடன் சாய்ந்து உள்ளன. 2,585 மரக்கிளைகள் முறிந்து விழுந்து உள்ளன. இதில், மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆறு பேர் பலத்த காயம் அடைந்தனர். மரங்களை கண்காணிக்க, மேலும் அதிகாரிகள் தேவைப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

