/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மின்சார பஸ் ஓட்டுநர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க பரிந்துரை
/
மின்சார பஸ் ஓட்டுநர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க பரிந்துரை
மின்சார பஸ் ஓட்டுநர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க பரிந்துரை
மின்சார பஸ் ஓட்டுநர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க பரிந்துரை
ADDED : ஏப் 28, 2025 05:10 AM
பெங்களூரு: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், மின்சார பஸ்களின் எண்ணிக்கையை பி.எம்.டி.சி., அதிகரிக்கிறது. இதற்கு வசதியாக ஓட்டுநர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறது.
இது குறித்து, பி.எம்.டி.சி., தலைமை போக்குவரத்து நிர்வாகி பிரபாகர் ரெட்டி கூறியதாவது:
பி.எம்.டி.சி.,யில் மின்சார பஸ்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு, இந்த பஸ்கள் முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன.
மின்சார பஸ்களுக்கு மக்களிடமும் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. எனவே படிப்படியாக டீசல் பஸ்களை குறைத்து, மின்சார பஸ்கள் சேர்க்கப்படுகின்றன.
மின்சார பஸ்களை வினியோகித்த நிறுவனங்களே, ஓட்டுநர்களையும் நியமிக்கின்றனர். இவர்கள் திடீரென பிரேக் போடுவதால், பயணியர் தடுமாறி கீழே விழுவது, சக பயணியர் மீது சாய்வது, கம்பிகளின் மீது மோதி காயமடைவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் ஓட்டுநர், பயணியர் இடையே தகராறு நடக்கிறது.
இப்பஸ்களை அதிவேகமாக ஓட்டுவதும், பிரச்னைக்கு காரணமாகிறது. பெரும்பாலான ஓட்டுநர்கள், டீசல் பஸ்களை ஓட்டிய அனுபவம் உள்ளவர்கள். இவர்களுக்கு இந்த பஸ் ஓட்டுவது குறித்து பயிற்சி பெற, கால அவகாசம் தேவைப்படுகிறது.
எனவே ஓட்டுநர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும்படி, பஸ்களை வினியோகித்த நிறுவனத்திடம் கூறியுள்ளோம். பஸ் பிரேக்குகளின் தரத்தை உயர்த்தும்படி அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.