/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
5 மாவட்டங்களுக்கு இன்று 'ரெட் அலர்ட்' சிக்கமகளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
/
5 மாவட்டங்களுக்கு இன்று 'ரெட் அலர்ட்' சிக்கமகளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
5 மாவட்டங்களுக்கு இன்று 'ரெட் அலர்ட்' சிக்கமகளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
5 மாவட்டங்களுக்கு இன்று 'ரெட் அலர்ட்' சிக்கமகளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
ADDED : ஆக 18, 2025 03:15 AM

பெங்களூரு : கனமழை எதிரொலியாக சிக்கமகளூரு, உடுப்பி, உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, ஷிவமொக்கா ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது. சிக்கமகளூரு, உத்தர கன்னடாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிஷா கடற்கரை பகுதியில் நிலவும் வளிமண்டல காற்று சுழற்சியால், கர்நாடகாவின் கடலோர, மலைநாடு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக ஹாசன் மாவட்டம் சக்லேஸ்பூரில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஷிராடி காட்டில் நிறைய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.
எடகுமரி - சுப்பிரமணியா ரோடு இடையிலான ரயில் தண்டவாளத்தில் மண் சரிந்து விழுந்ததுடன், தண்டவாளத்தை மூழ்கடிக்கும் வகையில் தண்ணீர் ஓடியது.
அங்கு மீட்பு பணிகள் வேகமாக நடந்தது. நேற்று அந்த வழியாக ரயில் சென்றது. ஷிராடி காட் மாரனஹள்ளி கிராமம் வழியாக சென்ற, டேங்கர் லாரியில் இருந்து ஆயில் கசிந்தது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் டயர் வழுக்கி கொண்டே சென்றது.
சிக்கமகளூரு சிருங்கேரி பகுதியில் பெய்யும் கனமழையால், துங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, சிக்கமகளூரு, ஷிவமொக்கா ஆகிய, ஐந்து மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறி உள்ள வானிலை ஆய்வு மையம், 'ரெட் அலர்ட்' விடுத்து உள்ளது. இதனால் சிக்கமகளூரு, உத்தர கன்னடாவில் அங்கன்வாடி, பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரிலும் மிதமான மழை பெய்கிறது. நேற்று மதியம் ஜெயநகர் 7வது பிளாக்கில், ராட்சத மரம் சாய்ந்து, பஸ் நிறுத்தம் மீது விழுந்தது. இதில் பஸ் சேதம் அடைந்தது. பயணியர் யாரும் இல்லாததால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.