ADDED : ஜூன் 21, 2026 10:45 PM
அ நிறம் | அளவு
தங்கவயல்: தங்கவயல் பி.இ.எம்.எல்., தொழிற்சாலையின் தொழிலாளர் சங்கத்தின் 22வது தேர்தலில் மீண்டும் தலைவராக டபிள்யு.யு.எப்., (உப்) எனும் ஒர்க்கர்ஸ் யூனிட்டி அமைப்பை சேர்ந்த ஓ.ராமசந்திரரெட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இத்தேர்தலின் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. பி.இ.எம்.எல்., தொழிலாளர் சங்கத் தேர்தலில் டபிள்யு.யு.எப்., என்ற உப் அணியும் ஜே.ஏ.சி., ஜாக் என்ற ஜாயிண்ட் ஆக் ஷன் கமிட்டியும் போட்டியிட்டன.
இத்தேர்தலில் 877 பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால், 872 பேர் மட்டுமே ஓட்டளித்தனர்.
இதில், இந்த தொழிற்சங்கத்தின் தலைவராக, டபிள்யு.யு.எப்., என்ற அமைப்பை சேர்ந்த ஓ.ராமசந்திர ரெட்டி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
