/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கையில் கத்தியுடன் 'ரீல்ஸ்' பிக்பாஸ் பிரபலங்கள் கைது
/
கையில் கத்தியுடன் 'ரீல்ஸ்' பிக்பாஸ் பிரபலங்கள் கைது
கையில் கத்தியுடன் 'ரீல்ஸ்' பிக்பாஸ் பிரபலங்கள் கைது
கையில் கத்தியுடன் 'ரீல்ஸ்' பிக்பாஸ் பிரபலங்கள் கைது
ADDED : மார் 25, 2025 01:38 AM

பசவேஸ்வர நக : கையில் கத்தியுடன் 'ரீல்ஸ்' செய்த கன்னட பிக்பாஸ் பிரபலங்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி வாயிலாக பிரபலம் அடைந்தவர்கள் வினய் கவுடா, ரஜத் கிஷன். இவர்கள் இருவரும் சேர்ந்து சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டனர்.
இந்த ரீல்சில் இருவரும் கையில் கத்தியுடன் ரோட்டில், ரவுடி போன்ற தோரணையில் நடந்து வந்தனர். இதற்கு, பயங்கரமான ஆயுதங்களுடன் ரோட்டில் நடந்து வருவதா என எதிர்ப்புகள் கிளம்பின.
இதையடுத்து, பசவேஸ்வர நகர் போலீஸ் நிலையத்தில், பொது இடத்தில் கத்தியுடன் நடந்து வருவது, பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற காரணத்திற்காக, ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து, நேற்று இருவரிடமும் போலீசார் விசாரித்தனர். பிறகு, இருவரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
விசாரணையில், இந்த 'ரீல்ஸ்' வீடியோ ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டது. 'முற்றிலும் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக மட்டுமே எடுக்கப்பட்டது. வேறு எந்த தவறான நோக்கத்திற்காகவும் எடுக்கப்படவில்லை' என, வினய் ரஜத் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.